Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிறுதானியம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்பதனை அறிவோம்

Widgets Magazine

நம் முன்னோர்களின் முக்கிய உணவே பாரம்பரிய தானியங்களில் செய்த கஞ்சியும் கூழும்தான். அதனால்தான் எந்த நோயும்  இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். அதுஎல்லாம் நோயாளிகளுக்கு என்று ஒதுக்கிவிட்டு, ஜங்க் ஃபுட் தேடிப்போவது நாகரிகமாகத்  தெரியலாம். ஆனால் ஆரோக்கியமாக இருக்காது.

 
நோய் நம்மை நெருங்காமல் ஆரோக்கியமாக வைத்திருக்க சிறுதானியக் கஞ்சியும் கூழும் உதவி செய்யும். சிறுதானிய உணவான வரகு, கல்லீரலில் தேங்கியுள்ள பித்தநீரை வெளியேற்ற உதவும். அதிகமாக ஆல்கஹால் உட்கொள்பவர்களுக்கு, உடல் பருமன் ஏற்பட்டு, செரிமானமின்மையால், பித்தக்கற்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு வரகு உணவு நல்ல  மருந்து. 
 
குடல் புண் மற்றும் உணவுக்குழாயில் ஏற்படும் புண்ணுக்கு சாமை நல்ல மருந்து. உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றின் அளவையும் கட்டுக்குள்வைக்க உதவும். கழிச்சலைக் கட்டுப்படுத்தும்.
 
இளைத்த உடல் வலுவாகவும், உடல் எடை கூடவும் தினை உதவுகிறது. வயதானவர்களுக்கு மூட்டுகளில் உள்ள தேவையற்ற  நீரினை நீக்க தினை அதிகம் சேர்த்து கொள்ளலாம். மேலும், நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகள், கால் வீக்கம், முகவீக்கம்  ஆகியவற்றை குறைக்க உதவும். குழந்தை பெற்ற பெண்களுக்கு கர்ப்பப்பையில் உள்ள கசடுகளை வெளியேற்றவும், தாய்ப்பால்  சுரக்கவும் தினை பயன்படுகிறது
 
பட்டைத் தீட்டப்படாத சிவப்பு அரிசியில் நார்ச்சத்து நிறைந்ததுள்ளது. இதனால் வாய் ஓரங்களில் ஏற்படும் புண் குணமாகும்.  சர்க்கரை நோய் கட்டுப்படு்ம். புரதம் இதில் அதிகம் இருப்பதால், எலும்புகளின் வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.
 
கேழ்வரகு நார்ச்சத்து நிறைந்த உணவு. இதில் அமினோ அமிலங்கள், லிசித்தின் மற்றும் மெத்யோனைன் போன்றவை அடங்கியுள்ளன. கேழ்வரகுக்கூழ் அற்புதமான உணவு. பித்தத்தால் ஏற்படும் உடல் வெப்பத்தைக் கேழ்வரகு கட்டுப்படுத்தும். இதில் வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து இருப்பதால், ரத்தச்சோகையைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும், குடல் புற்று நோயினைத் தவிர்க்கவும் உதவுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இடது பக்கம் உறங்குவது கூடாது என கூற காரணம் என்ன?

நாம் குப்புறப் படுக்கும்போது வயிற்றைக் கீழே வைத்து படுத்திருப்பாதால் சுவாச அமைப்பில் ...

news

வைரஸ் காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணங்களும், அறிகுறிகளும் பற்றி தெரிந்து கொள்வோம்...

ஒவ்வொருவரும் முதலில் இந்த வைரஸ் காய்ச்சல் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டியது ...

news

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியினை தடைசெய்யும் முள்ளங்கி

பெருங்குடல், சிறுகுடல், சிறுநீரகங்கள், வயிறு, வாய் ஆகிய இடங்களில் உள்ள புற்றுநோய்க்கு ...

news

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் உணவு முறைகள்...!

சர்க்கரை நோய் பாதிப்பை உணவு முறை கொண்டும் கட்டுப்படுத்த முடியும். சரியான உணவு வகைகளை ...

Widgets Magazine Widgets Magazine