வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. வியாதிகள்
Written By Murugan
Last Updated : சனி, 16 நவம்பர் 2019 (17:24 IST)

பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் அதிகரிக்கும் சிறுநீரக பாதிப்புகள்

பருவநிலை மாற்றம் காரணமாக, இந்தியா போன்ற நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு சிறுநீரக நோய் பாதிப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.


 

 
சிறுநீரக பிரச்சனை காரணமாக, மத்திய அமெரிக்காவில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்ட நிலையில், இந்தியாவிலும் ஏராளமானோர் பாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏனெனில் இங்குதான் வெயிலிலும் மழையிலும் அதிக நேரம் உழைக்கும் தொழிலாளிகள் அதிகம் வாழ்கின்றனர்.
 
இதுபற்றி மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்தபோது, பருவநிலை மாற்றம் காரணமாக வெப்பம் அதிகமுள்ள இந்தியா போன்ற நாடுகளி வசிக்கும் மக்களுக்கு சிறுநீரக தொற்று அதிக அளவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.  இந்தியாவில் எப்போதும் வெப்பம் அதிகம். முக்கியமாக, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் எப்போதும் வெயில் அதிகமாகவே காணப்படுகிறது.


 

 
கடும் வெப்பம் காரணமாக உடலில் இருந்து வியர்வை அதிக அளவில் வெளியேறுவதால் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் உருவாகின்றன. அதேபோல், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற நோய்களும் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. லத்தீன் அமெரிக்காவில் வசிக்கும் மக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்கள்.
 
சென்ற ஆண்டு கூட ஆந்திராவில் வீசிய அனல் காற்றுக்கு 1400 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். எனவே, கோடை காலங்களில் வழக்கத்தை விட அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.