Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

செக்ஸ் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும் சர்க்கரை வியாதி

செக்ஸ் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும் சர்க்கரை வியாதி


Sasikala|
நடுத்தர வயதைத் தொட்ட பல ஆண்-பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவது பரவலாக அதிகரித்துவருகிறது.

 


ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல் திறன் குன்றத் தொடங்குவதாகக் கவலைபடுபவர்கள், சர்க்கரை நோயால் மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.
 
பெண்களைவிட ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப் படுகிறார்கள். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொள்ளாதவர்களீல் ஐம்பது விழுக்காட்டினர் ஆண்மைகுறைவுக்கு ஆளாகிறார்கள்.
 
சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இரத்த நாளங்கள் கேடுற்று விரைவில் சிதைந்துவிடுகிறது. இதனால் விரைப்புத் தன்மை இல்லாமை, விந்தணுக்களில் குறைப்பாடு ஏற்படுகிறது. 
 
விந்து முந்துதல், செக்ஸ் உணர்ச்சி குறந்துவிடுதல், பெண்ணாக இருந்தால் பிறப்புறுப்பை வழவழப்பாக வைத்துக்கொள்ளும் யோனிச் சுரப்பு நீர் குறந்து பிறப்புறுப்பு வறண்டுவிடுதல், பிறப்புறுப்பில் நோய்த் தொற்று, ஹார்மோன்களில் குறைபாடுகள் அல்லது மாறுபாடுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் தோன்றுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :