வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. தீபாவளி மலர்
Written By Webdunia

மஹாலக்ஷ்மி அவதார தினமே தீபாவளி

கிருதயுகத்தில் துர்வாச மஹரிஷியை அவமதித்ததால் அவரின் சாபத்துக்கு ஆளானான் இந்திரன். அதனால் தேவேந்திர பதவி   மற்றும் தன் சொத்து சுகம் அனைத்தையும் இழந்து பாவியாகி திரிந்தான் இந்திரன்.



தேவர்களும் லக்ஷ்மி கடாக்ஷத்தை இழந்து இந்திரனோடு திரிந்தனர். இழந்த இராஜ்ஜியத்தையும் லக்ஷ்மி கடாக்ஷத்தை மீண்டும் பெற ஒரு வழி கூறினார் ஸ்ரீமன் நாராயணன்.
 
“மந்தர மலையை மத்தாக கொண்டு, வாசுகி பாம்பை கயிறாக கொண்டு, ஒரு புறம் தேவர்களின் பரம எதிரிகளான அசுரர்களும்  மறு புறம் தேவர்களும் சேர்ந்து திருபார்கடலை கடைய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே தேவர்கள் இழந்த பதவி முதல்  அனைத்தையும் மீண்டும் பெறுவர்” என்று கூறி அருளினார்.
 
அதை போலவே தேவர்களும் திருபார்கடலைக் கடைந்தனர். அப்பொழுது தேவர்கள் இழந்த அமிர்தம், ஐராவதம், கல்பவிருக்ஷம் யாவும் திருபாற்கடலில் தோன்றி அவர்கள் வசமாயின. அதே சமயத்தில், ஆதிசக்தியின் அம்சமான மகாலஷ்மி தோன்றி  தேவர்களுக்கு ஆசி வழங்கி பின் திருமாலுடன் சேர்ந்தாள். அவள் அவதாரம் செய்த நாளும் தீபாவளி என்று நம் புராணம்  கூறுகிறது.
 
தீபாவளி அன்று:
 
காளி பூஜை: ஓடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் கொண்டாடப்படுகிறது.
கோவர்த்தன பூஜை: இந்தியாவின் மத்திய மற்றும் வடக்கு மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.
இந்து புத்தாண்டு: இனிதியாவின் மேற்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் உள்ள சில இடங்களில் கொண்டாடப்படுகிறது.
கேதார கௌரி விரதம்: சைவர்கள் மேற்கொள்ளும் விரதம்.
இவ்வாறாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கக்ளில் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
 
தீபாவளி நாளில் செய்யக்கூடிய லட்சுமி குபேர பூஜையால் நாம் பல்வேறு பலன்கள் எளிதில் பெறமுடியும். தனது தாயிடம்  (மஹாலஷ்மி) இருந்து நவநிதியங்களைப் பெற்ற குபேரரை தீபாவளி நாளில் வழிபடுவோருக்கு அவர் சகல செல்வங்களையும் அள்ளித்தருவார். ஸ்ரீலட்சுமி தேவியை பூஜிப்பவர்கள் அனைத்து செல்வங்களையும் அதாவது பொருள் செல்வம் மட்டுமின்றி,  வீடு நிறைய தானியங்கள், மக்கட் செல்வம், தைரியம், வீரம், அறிவுச் செல்வம் அனைத்தையும் பெற்று வாழ்வில் பரிபூரண  ஆனந்தத்தை அடைய முடியும்.