வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. நாடும் நடப்பும்
Written By Webdunia

ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா?

- சகாயரா‌ஜ்

''ஜெயலலிதா தற்போது ஆட்சியிலே அமர்ந்ததும் இலங்கை தமிழர்களுக்கு தீர்மானம் நிறைவேற்றியதும், அதனை வரவேற்று, பாராட்டி பலரும் பேசுவதிலும், அறிக்கை விடுவதிலும் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அவர்கள் அப்படி ஜெயலலிதாவைப் பாராட்டுகின்ற நேரத்தில், தேவையில்லாமல் நம்மீது விழுந்து பிறாண்டி திருப்தி அடைய நினைக்கிறார்களே, அது சரி தானா?'' என்று மு‌ன்னா‌ள் முதலமை‌ச்சரு‌ம், ‌தி.மு.க. தலைவருமான கருணா‌நி‌தி ‌விர‌க்‌தியுட‌ன் கே‌‌ட்டு‌ள்ளா‌ர்.

கட‌ந்த 2009ஆ‌ம் ஆ‌ண்டு மே மாத‌ம் ‌விடுதலை‌ப்பு‌லிகளு‌க்கு‌ம், இல‌ங்கை இராணுவ‌த்‌தினரு‌க்கு‌ம் போ‌ர் உ‌ச்சக‌ட்ட‌த்தை அடை‌ந்தபோது ம‌த்‌திய அர‌சி‌ல் அ‌ங்கு‌ம் வ‌கி‌த்து வரு‌ம் ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி‌யிட‌ம் போ‌ரை ‌நிறு‌த்த‌ச் சொ‌ல்லு‌ங்க‌ள் எ‌ன்று ஈழ‌த் த‌‌மிழ‌ர்க‌ள் கூ‌க்கு‌ர‌ல் எழு‌ப்‌பியபோது செ‌விட‌ன் கா‌தி‌ல் ஊ‌திய ச‌ங்குபோல‌த்த‌ா‌ன் இரு‌ந்தா‌ர் கருணா‌நி‌தி.

த‌ற்போது இல‌ங்கை த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌க்காக கட‌ந்த 1977 ஆ‌‌ம் ஆ‌ண்டு சென்னை‌யிலே ஒரேநாள் அறிவிப்பில் 5 லட்சம் பேரைத் திரட்டி பிரம்மாண்டப் பேரணி நடத்தினே‌ன், 1983ஆ‌ம் ஆ‌ண்டு ச‌ட்ட‌‌ப்பேரவை உறு‌ப்‌பின‌ர் பத‌வியை ரா‌ஜினாமா செ‌ய்தே‌ன் எ‌ன்று‌ கூ‌று‌ம் கருணா‌நி‌தி, ஆ‌ட்‌சி‌யி‌ல் இரு‌ந்தபோது 2009ஆ‌ம் ஆ‌ண்டு இல‌ங்கை த‌மிழ‌ர்களு‌க்காக எ‌ன்ன செ‌ய்தா‌ர் எ‌ன்பதுதா‌ன் த‌ற்போதைய கே‌ள்‌வி.

2009ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி, அங்கே போர் தமிழர்கள் மீது சிறிலங்க் இராணுவம் உச்சக்கட்டத் தாக்குதல் நடத்தியபோது, இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்‌கிறே‌ன் எ‌ன்று கூ‌‌றி மெ‌ரினா க‌ட‌ற்கரை‌யி‌ல் உ‌ள்ள அண்ணா நினைவிடத்தி‌ல் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய கருணா‌நி‌தி, ‌சில ‌ம‌ணி நேர‌த்‌திலேயே இல‌ங்கை‌யி‌ல் போ‌ர் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளதாக ம‌த்‌திய உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம் கூ‌‌றினார் என்று சொ‌ல்‌‌லி‌வி‌‌ட்டு போரா‌ட்ட‌த்தை முடி‌த்து‌க் கொ‌ண்டு ம‌திய உணவு‌க்கு ‌வீ‌ட்டு‌க்கு செ‌ன்று‌வி‌ட்டா‌ர்.

உ‌ண்ணா‌விரத‌த்தை முடி‌த்து‌வி‌ட்டு செ‌ன்ற அடு‌த்த‌ ‌நி‌மிடமே பாதுகா‌ப்பு வளைய‌த்த‌ி‌ல் இ‌ரு‌ந்த த‌மி‌ழ் ம‌க்களை அ‌ந்நா‌ட்டு இராணுவ‌‌ம் தடை செ‌ய்ய‌ப்ப‌ட்ட கு‌ண்டுகளை கொ‌த்து‌க் கொ‌த்தாக ‌வீ‌சிக் கொ‌ன்றது. இலங்கையில் போர் முடிந்துவிட்டது என்று கூறினீர்கள், ஆனால் அங்கு கடுமையான தாக்குதல் நடந்து வருகிறதே என்று செ‌ய்‌தியாள‌ர்க‌ள் கருணா‌நி‌தி‌யிட‌ம் கே‌ட்டபோது, “மழை ‌வி‌ட்டுவிட்டது, ஆனால் துவான‌ம் ‌விட‌வி‌ல்ல” எ‌ன்றா‌ர்.

அவர் அன்று குறிப்பிட்ட தூவாணத்தில்தான் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சிங்கள இனவெறி இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், கொத்துக் குண்டுகள், கனரக பீரங்கிகள், வான் வழி குண்டு வீச்சு, வெப்பக் குண்டுகள் என்று உலகினால் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு சிங்கள இனவெறி இராணுவம் தமிழர்களை அழித்தொழித்தபோது மத்திய அரசு அதற்கு முழுமையாகத் துணை நின்றது. ஈழத் தமிழினத்தின் அழிப்பிற்குத் துணை நின்ற டெல்லி அரசிற்கு கருணாநிதியின் அரசு முழுவதுமாகத் தெரிந்தே துணை நின்றது. இதுதான் உண்மை. இதை கருணாநிதியால் மறுத்துவிட முடியாது. ஏனெனில் உலகம் அறிந்த உண்மை இது.

இலங்கை மீது பொருளாதார தடை கோரி தமிழக சட்டப் பேரவையில் முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா தீர்மானம் நிறைவேற்‌றி உ‌ள்ள‌தை த‌ற்போது பொறு‌க்க முடியாம‌ல் இல‌ங்கை த‌மிழ‌ர்களு‌க்காக நா‌ன் செ‌ய்தது எ‌ன்ன எ‌ன்ற ஒரு ‌நீ‌ண்ட ப‌ட்டியலை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளா‌ர் கருணா‌நி‌தி.

தி.மு.க பொறுப்பிலே இருந்தபோது இலங்கைத் தமிழர்களுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டப் பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம், தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம், மனிதச் சங்கிலி போராட்டம், பிரதமருக்கு தந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு, ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக் கொண்டது, இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு என்றெல்லாம் நடத்தியதாகவும், ஆனால் அவைகள் எல்லாம் என்னால் நடத்தப்பட்ட நாடகங்கள் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையிலே கூ‌றியது நூ‌ற்று‌க்குநூறு உ‌ண்மைதா‌ன்.

ச‌ெ‌ல்வ‌ம் கொ‌‌‌‌ழி‌க்கு‌ம் அமை‌ச்ச‌ர் பத‌வியை பொறுவத‌ற்காக டெ‌ல்‌லி‌க்கு ஓடோடி செ‌ன்று பத‌விகளை பெ‌ற்று‌க் கொ‌ண்ட கருணா‌நி‌தி, இல‌ங்கை‌யி‌ல் போ‌ர் உ‌ச்சக‌ட்ட‌த்தை அடை‌ந்தபோது பல ல‌ட்ச‌க்கண‌க்கான த‌மிழ‌ர்களை கா‌ப்பா‌ற்ற டெ‌ல்‌லி செ‌ன்றாரா எ‌ன்பதுதா‌ன் கே‌ள்‌வி.

இல‌ங்கை‌யி‌ல் த‌மிழ‌ர்களை அ‌ழி‌த்த கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யுட‌ன் ச‌ட்ட‌ப் பேரவைத் தே‌ர்த‌லி‌ல் கூ‌ட்ட‌ணி வை‌த்து போ‌ட்டி‌யி‌ட்ட ‌தி.மு.க. படுதோ‌‌ல்‌வியை ச‌ந்‌தி‌த்தது. இல‌ங்கை த‌மிழ‌ர்களு‌க்காக ம‌த்‌திய அர‌சி‌ல் ‌‌வில‌கி இரு‌ந்தாலோ அ‌ல்லது கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சியை தே‌ர்த‌லி‌ல் கூ‌ட்ட‌ணி சே‌ர்‌க்காம‌ல் இரு‌ந்‌திரு‌ந்தாலோ கொ‌ஞ்ச‌‌ம் கெளரவமான தோ‌ல்‌வியை ச‌ந்‌தி‌த்‌திரு‌க்கு‌ம். ஆனா‌ல் ‌தி.மு.க.வு‌க்கு ‌கிடை‌த்தோ படுதோ‌ல்‌வி.

''இலங்கை தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை; போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான்'' என்று ஒரு கட்டத்தில் ஜெயல‌லிதா அறிக்கை விட்டது தவறு எ‌ன்றாலு‌ம், த‌ற்போது ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் வரலா‌‌ற்று ‌ச‌ிற‌ப்பு ‌மி‌க்க ‌தீ‌ர்மான‌த்தை ‌நிறைவே‌ற்‌றி அதனை ச‌ரி‌ப்படு‌த்‌தி‌க் கொ‌ண்டா‌ர். இ‌ந்த ‌தீ‌ர்மான‌த்தை ‌நிறைவே‌ற்ற கருணா‌நி‌தி‌க்கு து‌ணி‌‌ச்ச‌ல் இரு‌ந்ததா எ‌ன்பதுதா‌ன் கே‌ள்‌வி.

தற்போது ஈழத் தமிழர்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டவரைப் போல அதை செ‌ய்தே‌ன் இதை‌த் செ‌ய்த‌ே‌ன் எ‌ன்று கூ‌றி ‌நீ‌ண்ட ப‌ட்டியலை போ‌ட்டு‌ள்ள கருணா‌நி‌தி, உண்மையான தமிழ‌ர்களு‌க்கு நாடகம் நடத்துவது யார் என்பது புரியாமலா போய் விடும்?

முத‌லி‌ல் குடு‌ம்ப‌ம், அ‌‌ப்புற‌ம்தா‌ன் ‌ம‌க்க‌ள் எ‌ன்ற ‌நினை‌வி‌ல் இரு‌ந்த கருணா‌நி‌தி‌க்கு ஜெயல‌லிதா கொடு‌க்கு‌ம் அடியு‌ம் மரண அடிதா‌ன். இல‌ங்கை‌த் ‌த‌மிழ‌ர்களு‌க்காக இ‌னியு‌ம் பத‌வியை துற‌‌ந்தே‌ன், கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டே‌ன் எ‌ன்று கூறுவதை ‌நிறு‌த்‌தி‌வி‌ட்டு, இதற்குப் பிறகாவது நேர்மையாகவும், நியாயமாகவும் தமிழர்கள் பிரச்சனையில் நடந்துகொள்ள கருணாநிதி முன்வர வேண்டும். அதைச் செய்யாமல், பெரிய கடிதத்தை எழுதி, அதை முரசொலியில் வெளியிட்டுவிட்டால் அது உண்மையாகிவிடும் என்றோ, வரலாறாகிவிடும் என்றோ எண்ணினால் அரசியலில் மதிப்பற்று போவார்.