வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sasikala
Last Modified: சனி, 4 மார்ச் 2017 (13:13 IST)

தமிழக இளைஞர்கள், மாணவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்!

நெடுவாசலை நோக்கி நம் பயணம் (பாகம் 2): தமிழக இளைஞர்கள், மாணவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்! நெடுவாசலில் 17 வது நாளாக மக்கள் போராட்டம். மண்ணெண்ணெய் எடுக்கிறோம் என்ற பெயரில் ஏமாற்றப்பட்ட மக்களிடம், பேச்சுவார்த்தை என்ற பெயரில் அன்பு கலந்த டீஆர்ஓ மிரட்டல்கள். நிலம் விழுங்கும்  பூதம் போல புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் என எங்கும் ஹைட்ரோ கார்பனுக்கான கிணறு வெட்டும்  பூதம் போல இந்த அரசுகள்.
 
 
 
தமிழக விவசாயிகள் விஞ்ஞானிகள் அல்ல. நிலத்தின் பெருமையை மண்ணின் மாண்பை உணர்ந்தவர்கள். இடிந்தங்கரை போராட்டத்தைப் போல நெடுவாசலில் நிற்கும் களம் காணும் வீரர்களையும் கால் கொண்டு மிதிக்க/ நசுக்க தயாரான அரசு. களம் காணும் வீரர்களை நக்ஸல்கள் என அழைக்கும் போலி தேச பக்தர்கள். உலகின் அதிகமான நாட்கள் நடந்த ஒரு புரட்சிப் போராட்டம் கூடங்குளம் அணு மின் உலைக்கு எதிரான இடிந்தங்கரை வாசிகள் போராட்டம். பெண்கள், மீனவர்கள் என பாராமல் இடிந்தங்கரை போராட்ட களத்தில் நின்ற அனைவர் மீதும் தேச துரோக வழக்குகள் பாய்ச்சிய அனுபவம் வாய்த்த அரசு நக்ஸல்கள்  இது. 
 
இடிந்தங்கரை போராட்டத்தின் போது அரசு அண்ணா பல்கலைக்கழக ஆற்றல் மைய பேராசிரியர் இனியனை அழைத்து, அரசு ரிப்போர்ட் பெற்று, மக்கள் மத்தியில் பேச வைத்தது. தற்சமயம் அண்ணா பல்கலைக்கழக ஜியாலஜி பேராசிரியர்  இளங்கோவை மக்கள் மத்தியில் பேச வைக்கிறது. இனியனும் இளங்கோவும் விஞ்ஞானிகள் தான். சமூக  விஞ்ஞானிகள் அல்ல. 
 
என் தேசத்தின் மக்களிடம் நீரை உறிச்சும் கார்பரேட் கம்பெனிகளை  விட இந்த அரசு கொடுமையான செயலில் இறங்கி உள்ளது. யாரை ஏமாற்ற பார்க்கிறது. ஹைட்ரோ கார்பன் ப்ராஜெக்ட்க்கு பிறக்கான ஒரு நிலத்தின் விளைத் தன்மையை நிரூபிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ONGC இடம் உள்ளதா? அரசுக்கு ஆதரவான விஞ்ஞானிகளால் ஹைட்ரோ கார்பன் ப்ராஜெக்ட்டின் போது துளை இட்டு அனுப்பப்படும் பென்டோனைட் chemical விளைவுகள் விளக்கம் தரமுடியுமா? சில எலும்பு துண்டுகளுக்காக எண்ணற்ற விவசாயிகள் வயிற்றில் அடிக்காதீர்கள்!
 
இடிந்தங்கரை போராட்ட தோல்விக்கான காரணம், அந்த போராட்டம் நெல்லை தாண்டி எடுத்து செல்லப்படவில்லை. தமிழக இளைஞர்கள், மாணவர்களை சரியாக சென்று சேரவில்லை. தமிழகத்தின் அங்கொன்றும் இங்கொன்றும் போராடும் மாணவர்கள் ஒரு அணி திரளவேண்டும். ஜல்லிக்கட்டு எனும் தன்னெழுச்சி போராட்டம் இளைஞர்கள், மாணவர்களை கொண்டுதான் டெல்லியின் மஹா ராஜாக்கள் காதுகளை எட்டியது. இது மண்காக்க புறப்பட வேண்டிய பொன்னான தருணம்! தமிழர்களின் வீரம் பரணில் இல்லை அவர்களின் நெஞ்சத்தில் உள்ளது. நெடுவாசல் நோக்கிய நம் பயணத்தை யார் தடுப்பது? ஒளி படைத்த கண்ணினாய் உறுதி கொண்ட நெஞ்சினாய் களம் காண்போம்.
 
விடியும் வரை தொடரட்டும் நெடுவாசல் போராட்டம் !

 
இரா .காஜா பந்தா நவாஸ்,
பேராசிரியர்