Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதா காரிலேயே ஜெயலலிதா சமாதிக்கு வந்த சசிகலா!

சனி, 31 டிசம்பர் 2016 (01:57 IST)

Widgets Magazine

அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்தபோது ஜெயலலிதா பயன்படுத்திய காரையே பயன்படுத்தினார்.


 

கடந்த 5ஆம் தேதி ஜெயலலிதா காலமானதற்குப் பிறகு, கட்சியின் புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்காக வியாழன் அன்று [29-12-2016] அதிமுக பொதுக் குழு கூட்டம் கூட்டபட்டு அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றார். அங்கு, அவரை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் சசிகலா, ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதா சமாதியில் பொதுக்குழு தீர்மான புத்தகத்தை வைத்து, அஞ்சலி செலுத்தினார். பின்னர், எம்.ஜி.ஆர். நினைவிடத்திலும், அண்ணா நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினார்.

சிவப்பு நிற புடவை உடுத்தியிருந்த சசிகலா, ஜெயலலிதா பயன்படுத்திய காரின் முன் சீட்டில் அமர்ந்து மெரினா கடற்கரைக்கு வந்தார். சசிகலாவின் வருகையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சசிகலா இன்று பொதுச் செயலாளராகிறார் - முதன்முறையாக பொதுவெளியில் பேசுகிறார்

அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா இன்று சனிக்கிழமை [31-12-2016] ராயப்பேட்டையில் உள்ள ...

news

ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் விட்டு அழுத சசிகலா!

அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பின்பு முதன்முறையாக ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்த ...

news

’ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே பதவிக்கு வந்திருப்பேன்’: சசிகலா பேட்டி

தான் கட்சிப் பதவிக்கு வர வேண்டும் என்று விரும்பியிருந்தால், ஜெயலலிதா உயிரோடு இருந்தப்போதே ...

news

திமுகவில் இணைகிறாரா நடிகர் ஆனந்த்ராஜ்? - பரபரப்பு பேட்டி

அதிமுகவிலிருந்து விலகிய நடிகர் ஆனந்த ராஜ், வயோதிகம் காரணமாக ஏற்படும் மதிப்பின் ...

Widgets Magazine Widgets Magazine