1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sasikala
Last Updated : திங்கள், 12 செப்டம்பர் 2016 (12:47 IST)

வாழிய காவேரி எழுக இளைஞர்கள் சக்தி

வாழிய காவேரி எழுக இளைஞர்கள் சக்தி

தமிழர்களால் இந்த நூற்றாண்டில் மிகவும் உணர்வுபூர்வமாக அணுகப்பட்ட விஷயங்கள் மூன்று. அவை ஹிந்தி எதிர்ப்பு, ஈழம், காவேரி. காவேரி தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளின் அடையாளம்.


 


உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கர்நாடகம் தண்ணீர் திறந்து வரும் நிலையில் கர்நாடகாவில் நடைப்பெற்றுவரும் போராட்டங்கள் தேசிய ஒருமைப்பாட்டுக்கு உகந்தது இல்லை. கன்னட வெறியர்களின் உச்சகட்ட வன்முறை ஆட்டம் பெங்களூரில் சம்பத் என்ற இளைஞர் தாக்கப்பட்டது. இன்னும் கர்நாடகாவின் பல தமிழர்களால் வீட்டை விட்டு வெளியேறமுடியாத அவலம்.

வெட்கம்  வேதனை

இருசங்களால் நதி நீர் பகிர்ந்து கொள்ளப்படுகிறது (பொது செயல் திட்டத்தின் அடிப்படையில்). பாகிஸ்தான் மற்றும் பங்காளதேஷ்வுடன் நம்மால் நீரை பகிர்ந்து கொள்ள முடியும்போது இரு மாநிலங்கள் இடையே நதிநீர் பகிர்ந்து கொள்ள முடியாதது வேதனை ஆனது மட்டும் அல்ல வெட்கப்பட வேண்டிய விசயமும்கூட பொறுப்பற்ற மத்திய அரசு
மத்திய நீர்வள அமைச்சர் சன்சிவ் குமார் பல்யான் நதிகளை மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றும்போது இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்கிறார். தீர்வுகள் தேவைஇல்லை, தீர்வுகளை சொல்ல உங்களுக்கு எதற்கு மத்திய நீர்வள அமைச்சர் பதவி? டிஜிட்டல் இந்தியா, தூய்மைஇந்தியா திட்டங்களை இந்த அரசு எவ்வாறு செயல்ஆக்கம் செய்தது. இந்த தேசத்தில் பிரதமர்முதல் சாமானியன்வரை உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு கட்டுபட்டவர்கள். அரசுகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. கர்நாடகாவும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டவர்கள்தானே? பிறகு ஏன் இந்த வெறுப்புகள், போராட்டங்கள்.

பிரதமர் எப்போது தனது திருவாய் மலர்வார்

வீரப்பன் கர்நாடக நடிகர் ராஜ்குமாரை 2000தில் கடத்தியப்போது கர்நாடக தமிழக அரசின் சார்பில் பேச்சு வார்த்தைக்குழு அமைக்கப்பட்டது. அப்போது  அப்துல் கரீம் (வீரப்பனால் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் தந்தை) என்பவர் கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார். நீதிமன்றம், வீரப்பன் தனிநாடு கேட்பான் அப்போதாவது மத்திய அரசு தலை இடுமா என்று கேட்டு கொட்டு வைக்கிறது. இப்போது கர்நாடக தனிநாடு கேட்கும் அப்போதாவது பிரதமர் வாய்திறப்பாரா? இல்லை 91ல் தமிழர்களுக்கு ஏற்பட்ட துரோகங்களை, உயிர் இழப்புகளை, வலிகளை பிரதமருக்கு எடுத்துசொல்ல பிரதமர் அலுவலகத்தில் அதிகாரிகளே இல்லையா?

கட்சிகளை மறப்போம் தமிழகத்தின் குரலை பதிவுசெய்வோம்

கர்நாடக மேலவை எதிர்கட்சி தலைவர் ஈஸ்வரப்பா மதுரையில் வறட்சி காரணமாக கர்நாடக தண்ணீர் தரமுடியாது என்கிறார். கர்நாடக முதலமைச்சர் எதிர்கட்சி தலைவர்களை சந்திக்கிறார். முன்னாள் பிரதமர் தேவகௌடா பிரதமரை சந்திக்கிறார். போராட்ட அமைப்புகளுக்கு கர்நாடக அரசு ஆதரவு தெரிவித்துவருகிறது. மொத்தத்தில் தனது குரலை வலுவாக பதிவுசெய்து வருகிறது. தேவகௌடாவை பிரதமர் ஆக்கிய கலைஞர்  என்ன செய்து கொண்டிருக்கிறார்? திமுவின் சுருதி குறைந்து விடாதா என்ன? முதலமைச்சரே கோபாலபுரம் வந்து தங்கள் துயில் எழுப்புவார் என்று நினைக்கிறீர்களா கருணாநிதி? எதையும் தாங்கும் இதயம் உங்களுடையது. ஆனால் விவசாயிகளுக்கு இருப்பது அரை ஜாண் வயிறு தான். கருணாநிதி கண்டிப்பாக டெல்லி செல்ல வேண்டும், பிரதமரை சந்திக்க வேண்டும், தேசிய ஊடகங்களுக்கு காவேரியில் நம் உரிமைகளை பற்றி சொல்ல வேண்டும். தஞ்சை தரணி பாலைவனம் ஆன பிறகுதான் முதலமைச்சர் எதிர்கட்சிகளை சந்திப்பாரா? இது நம் உரிமைகளுக்காக நமது உணர்வுகளை டெல்லிக்கு சொல்ல வேண்டிய நேரம்.

எழுக  இளைஞர்கள் சக்தி 
 
பெருவெள்ளத்தால் சென்னை சூழப்பட்டப்போது, கிளர்ந்து எழுந்தது இளைஞர்கள் சக்தி. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் வம்சம் நாம். ஆளும் மற்றும் ஆண்ட அரசுகள் எல்லாம் இளைஞர்கள்சக்தி முன்பு பெரிய பூசியம். தனி தெலுங்கானாவிற்கான போராட்டத்தை இளைஞர்கள் சக்தி கையில் எடுத்தபோதுதான் உதயம் ஆனது தனி தெலுங்கானா. காவேரியில் நம் உரிமைகளைப்பெற எழட்டும் இளைஞர்கள்சக்தி சாதி மத மோதல்கள் அற்ற இளைய சமுதாயமே களத்தில் நின்று போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக உங்களின் குரலைபதிவு செய்யுங்கள்.

இரா .காஜா பந்தா நவாஸ் , 
பேராசிரியர் 
இயந்திரவியல் துறை,
சத்தியபாமா பல்கலைக்கழகம்,
சென்னை
[email protected]