Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழகம் வந்த பிரதமர் மோடி - அப்துல்கலாம் மணிமண்டபத்தை திறந்து வைத்தார்

Last Modified: வியாழன், 27 ஜூலை 2017 (12:13 IST)

Widgets Magazine

மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் மணிமண்டபத்தை திறந்து வைக்க இன்று பிரதமர் மோடி ராமேஸ்வரம் வந்தார்.


 

 
அப்துல்கலாமின் நினைவிடம் ராமேஸ்வரம் பேக்கரும்பு எனும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.16 கோடி 5 லட்சம் செலவில் அவருக்கு அங்கு மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. அதை திறந்து வைப்பதற்காக, மோடி தனி விமானம் மூலம் மதுரை வந்து, அதன் பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தார். 
 
இதனால் ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவரை அமைச்சர்கள் வரவேற்றனர். அங்கு வந்த மோடி, கலாமின் மணிமண்டபத்தை அவர் திறந்து வைத்தார். அவரோடு மத்திய அமைச்சர் வெங்கயாநாயுடு மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உடன் உள்ளனர்.
 
கலாமின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் மோடி. அதன் பின், கலாமின் உறவினர்களிடம் அவர் உறையாடினார். அதன் பின், மணிமண்டபத்தின் உள்ளே சென்று பார்வையிட்டார்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இனி திருநங்கைகளுக்கு ராணுவத்தில் இடம் இல்லை; டிரம்ப் அதிரடி

திருநங்கைகளுக்கு இனி அமெரிக்க ராணுவத்தில் இடம் இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ...

news

ஓபிஎஸ் நிலைமை இப்படி ஆகிவிட்டதே: தனது அணியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளாரா?

அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தனி அணியாக செயல்பட்டு வரும் முன்னாள் ...

news

மீண்டும் பீகார் முதல்வரானார் நிதிஷ்குமார்: பாஜக தலைவர் சுஷில் மோடி துணை முதல்வர்!

பீகார் மாநிலத்தின் முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்த நிதிஷ்குமார். இன்று பாஜக ...

news

தமிழக அமைச்சரவை மாற்றம்?: ஓபிஎஸ் துணை முதல்வர்?

தமிழக அமைச்சரவை மாற்றம் இன்னும் சில நாட்களில் இருக்கும் எனவும் அப்போது அதிமுகவின் எல்லா ...

Widgets Magazine Widgets Magazine