வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Modified: சனி, 8 ஜூன் 2019 (20:38 IST)

387 ரன்கள் இலக்கு: கரை சேருமா வங்கதேசம்

நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்தும், வங்கதேசமும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று தெரியாத்தனமாய் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துவிட்டது வங்கதேசம். அனைத்து பந்துகளையும் அடித்து விளாசிய இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் பெற்றுள்ளது.

தற்போது விளையாடி வரும் வங்கதேச அணி 12 வது ஓவரிலேயே 2வது விக்கெட்டை இழந்து விளையாடிவருகிறது. இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்புகள் மிக பிரகாசமாக இருப்பதாக தெரிகிறது. 2015ல் அடைய முடியாத வெற்றியை இப்போது அடைந்துவிட இங்கிலாந்து ஆர்வம் காட்டுவது போல தெரிகிறது. இங்கிலாந்து அணி வீரர்களாவது ஒரு சதம், ஒரு அரை சதம் எடுத்து விக்கெட் இழந்தார்கள். வங்கதேசமோ ஆரம்பித்த வேகத்திற்கு விக்கெட்டை இழந்து நிற்கிறது.

முதலில் அவுட் ஆன சௌமியா சார்கர் வெறும் 2 ரன்களில் அவுட் ஆனார். தமீம் இக்பால் ஒரு பவுண்டரி அடித்தார். 18 ரன்களில் அவரும் அவுட் ஆனார். இன்னும் ஓவர்களுக்கு ஏற்ற ரன்களும் கிடைக்கவில்லை. என்ன செய்ய போகிறது வங்கதேசம் என ரசிகர்கள் பார்த்தபடி உள்ளனர். தற்போது சாகிப் அல் ஹசன் மட்டும்தான் நம்பிக்கை அளிக்கும் வண்ணம் விளையாடி அரை சதத்தை நெருங்கியுள்ளார். இனிவரும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினால் வங்கதேசம் வெற்றிபெற ஓரளவுக்கு வாய்ப்புகளும் இருக்கிறது.