150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இங்கிலாந்து

Last Modified புதன், 19 ஜூன் 2019 (07:17 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் 24வது லீக் போட்டி நேற்று இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து ஆஸ்திரேலியா அணியை பின்னுக்கு தள்ளிய இங்கிலாந்து, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது
நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷித்கான் மிக மோசமாக பந்துவீசினார். அவர் 9 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 110 ரன்களை வாரி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து அணி: 397/6
50 ஓவர்கள்

மோர்கன்: 148
பெயர்ஸ்டோ: 90
ரூட்: 88
எம்.எம்.அலி: 31

ஆப்கானிஸ்தான் அணி: 247/8
50 ஓவர்கள்

ஷாஹிதி: 76
ரஹ்மத் ஷா: 46
அஸ்கார் ஆப்கன்: 44
குல்பதின் நயிப்: 37
ஆட்டநாயகன்: மோர்கன்

இன்றைய ஆட்டம்: நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா


இதில் மேலும் படிக்கவும் :