செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: புதன், 3 செப்டம்பர் 2014 (16:58 IST)

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

தென் ஆப்பிரிக்க, ஜிம்பாப்வே, மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் தென்னாப்பிரிக்க அணியை ஆஸ்திரேலியா சந்தித்தது.

இப்போட்டியில் டாஸ் ஜெயித்த  தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய கட்டளையிட்டது. ஆஸ்திரேலிய அணி  தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. யூஸ்-ஸ்மித் ஜோடி. இருவரும் ஜோடியாக சேர்ந்து 100 ரன்களை கடந்தபோது ஸ்மித் 36 ரன்னில் அவுட்டானார். மேலும் மார்ஷ் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்டார்.

இறுதியில் ஆஸ்திரேலியா 282 ரன்களை குவித்தது. பின் தென் ஆப்பிரிக்க அணி தனது இன்னிங்சைத் தொடங்கியது. இதில் காக் 1 ரன்னில் அவுட்டானார்.
தென் ஆப்பிரிக்க அணியில் மெக்லாரன் மட்டும் 24 ரன்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்கா அணி 44 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 220 ரன்களை மட்டுமே எடுத்தது. இறுதியில், ஆஸ்திரேலியா 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

ஆட்டநாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் தட்டிச் சென்றார்.