வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : சனி, 29 மார்ச் 2014 (12:11 IST)

மீண்டும் பந்து வீச்சினால் வெற்றி! அரையிறுதியில் இந்தியா!

சுழல்பந்துக்கு சாதகமான வங்கதேச ஆட்டக்களத்தில் இந்தியா அபாரமாக பந்து வீசி நேற்று வங்கதேசத்தை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தி 2007-ற்குப் பிறகு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
தொடர்ச்சியாக 15வது முறை தோனி டாஸ் வென்றார். மீண்டும் சரியாக வங்கதேசத்தை பேட் செய்ய அழைத்தார்.
 
மீண்டும் அமித் மிஸ்ரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இருபது ஓவர் கிரிக்கெட்டில் அவர் ஒரு ஜீனியஸ் ஆகி வருகிறார். அஸ்வினுக்கும் நேற்று நல்ல தினம். வங்கதேசம் முதல் ஓவரில் 13 ரன்கள் விளாசியது. தமீம் இக்பாலுக்கு ஷிகர் தவான் மிக சுலபமான ரன் அவுட்டை மிஸ் செய்தார்.
 
அவ்வளவு அருகில் வந்தும் கூட ஸ்டம்பை அவரால் தகர்க்க முடியவில்லை என்பது அதிசயமே. பேட்ஸ்மென் ஸ்க்ரீனில் இல்லை. மெதுவாக அவரே அருகில் வந்து ஸ்டம்பை தட்டியிருக்கலாம். ஆனால் இந்த வாய்ப்பை தமீம் இக்பால் பயன்படுத்திக் கொள்ளவில்லை உடனடியாக அவுட் ஆனார்..

அஸ்வின் முதல் 2 ஓவரில் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். புவனேஷ் குமார் ஷாகிபுல் ஹசனை வீழ்த்த வங்கதேசம் வழக்கம் போல் 21/3 ஆனது.
அனாமுல் ஹக், முஷ்பிகுர் இணைந்து சில நல்ல ப்ளோக்களை கொடுத்தனர். 46 ரன்களை விரைவில் சேர்த்தனர். ஆனால் 67/4 என்று ஆன வங்கதேசம் அதன் பிறகு எழும்ப முடியவில்லை. அனாமுல் ஹக் 43 பந்தில் 44 ரன்களையும் பின்னால் மகமுதுல்லா 23 பந்துகளில் 33 ரன்களையும் எடுக்க மரியாதைக்குரிய ஸ்கோரை வங்கதேசம் எடுத்தது.
 
131/5 என்ற நிலையில் மிஸ்ராவின் 20வது ஓவரில் 2 விக்கெட்டுகள் காலியானது. ஒரு ஸ்டம்பிங் ஒரு லாங் ஆஃப் கேட்ச்.
 
இந்தத் தொடரில் இதுவரை இந்தியா மட்டுமே 140 ரன்களை எதிரணிக்கு விட்டுக் கொடுக்காத அணியாகும். இதுபோன்ற தாழ்வான ரன் இலக்கை இந்தியா 10 க்கு 9 முறை வெற்றிகரமாக துரத்தியுள்ளது.

ஷிகர் தவான் செம தடவல் தடவினார். கடைசிய்ல் அவுட்டும் ஆகி வெளியேறினார். மீண்டும் ரோகித், கோலி இணைந்தனர். இருவரும் இணைந்து 13 ஓவர்களில் 100 ரன்களைச் சேர்த்தனர். ரோகித் 44 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்ஸுடன் 56 எடுத்து மோர்டசாவிடம் கடைசியாக அவுட் ஆனார்.

தோனி முன்னால் களமிறங்கி 2 அவர் பாணி சிக்ஸர்களை விளாசினார். 12பந்துகளில் 22 ரன்கள், கோலிக்கு மீண்டும் ஒரு அரைசதம்.
 
4 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்த அஸ்வின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 
இன்று நெதர்லாந்து அணி நியூசீலாந்தையும், தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்தையும் எதிர்கொள்கின்றன