வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 28 மார்ச் 2014 (19:57 IST)

கெய்ல் தொடங்க டேரன் சாமி முடித்தார்! ஆஸ்ட்ரேலியாவுக்கு 2வது தோல்வி!

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக ஆடி பரபரப்பான கடைசி ஓவரில் ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தி 2வது வெற்றியைப் பதிவு செய்தது. ஆஸ்ட்ரேலியாவின் அரையிறுதி வாய்ப்பில் இருள் சூழ்ந்துள்ளது.
முதலில் பேட் செய்த ஆஸ்ட்ரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கிறிஸ் கெய்ல் அதிரடியாகத் துவங்கினார். ஆனாலும் இடையில் ஏற்பட்ட சரிவினால் கடைசி 3 ஓவர்களில் 41 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி 2 ஓவர்களில் 31 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
மிட்செல் ஸ்டார்க் 19வது ஓவரை வீச முதல் பந்து ஆஃப் வாலியாக தூக்கி நேராக அடித்தார் பந்து சிக்சருக்குப் பறந்தது. அடுத்த பந்து மிக அழகாக ஒருவாறு ஒதுங்கிக் கொண்டு இடைவெளியில் ஒரு பிளிக் செய்தாரே பார்க்கலாம் பவுண்டரி பறந்தது.

இன்னொரு பந்து வைட் ஆஃப் வாலியாக அது பாயிண்டில் பவுண்டரி. ஸ்டார்க் திணற அந்த ஓவரில் 19 ரன்கள் வந்தது. கடைசி ஓவர் 12 ரன்கள் தேவை. டேரன் சாமி ஸ்ட்ரைக்கில் இருக்கவேண்டிய அவசியம் இருந்தது. ஆனாலும் எதிர் முனையில் டிவைன் பிராவோ ஏற்கனவே 12 பந்துகளில் 27 விளாசியிருந்தார்.
முதல் 2 பந்துகள் யார்க்கர் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அடுத்த பந்து புல்டாஸ் போட பந்து சிக்சருக்குப் பறந்தது. இது லாங் ஆபில் சிக்ஸ். அடுத்த பந்து நேராக ஒரு சிக்ஸர். 2 பந்துகள் மிச்சம் இருக்க வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மைதானத்தில் குதியாட்ட்டம் போட்டனர். கெய்ல் டான்ஸே ஆடிவிட்டார்.
 
வெஸ்ட் இண்டீஸின் T20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக பட்ச துரத்தல் இதுதான் சாமி 13 பந்துகளில் 34 ரன்கள். ஆஸ்ட்ரேலியா இந்தியாவையும், வங்கதேசத்தையும் வென்றாலும் அரையிறுதிக்கு முன்னேறுமா என்பது சந்தேகமே.

ஆஸ்ட்ரேலியா இங்கு வருவதற்கு முன்பு 5 T20 போட்டிகளில் 5 வெற்றி. ஆனால் இங்கு ஸ்பின் பந்து வீச்சில் திணறல். ஒரு அணி எவ்வளவு காலம் ஸ்பின்னிற்கு திணறிக் கொண்டிருக்கும் என்பது புரியவில்லை.
178 ரன்களை பாதுகாத்து வெல்ல முடியவில்லை. அதுவும் துவக்க ஓவரே ஷேன் வாட்சன் டிவைன் ஸ்மித்திற்கு மைடன் வீசினார். ஆனால் கிறிஸ் கெய்லுக்கு மிக சுலபமான ஸ்டம்பிங் வாய்ப்பை பிராட் ஹேடின் கோட்டைவிட்டார். கெய்லே கிரீஸை அடைய முயற்சி செய்யவில்லை ஆனால் ஹேடின் பந்தை கலெக்ட் செய்யவில்லை.
 
மிட்செல் ஸ்டார்க்கை 4 பவர் பவுண்டரிகளை ஒரே ஓவரில் அடித்தார் கெய்ல். பிறகு டக்கி போலிஞ்சரை ஸ்கொயர்லெக் திசையில் ஒரு சிக்ஸ். 14 பந்துகளில் கெய்ல் 40 ரன்களை எட்டினார். ஆஸ்ட்ரேலியா 5வடு ஓவரில் 50 ரன்களை எட்டியது இதில் 10 பவுண்டரி ஒரு சிக்ஸ். அப்போதுதான் டிவைன் ஸ்மித் ஸ்டார்க் பந்தை எட்ஜ் செய்ய ஹேடின் அபாரமாக பிடித்தார்.
 
53 ரன்களை எடுத்த கெய்ல் சற்றே ஸ்லோ ஆனார். கடைசியில் கிளென் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து லெக் ஸ்பின்னர் மூர்ஹெட் பந்தில் அவுட் ஆனார்.
 
அதன் பிறகு ரன்கள் வரத்து குறைந்தது. லென்டில் ஸிம்மன்ஸ் 26 ரன்களில் வெளியேற மர்லான் சாமியெல்ஸ் தடவினார். கடைசியில் 12 ரன்களில் பிராட் ஹேடினின் அபார டைவிங் கேட்சிற்கு வெளியேறினார். டிவைன் பிராவோ களமிறங்கி ஸ்டார்க்கை ஒரு சிக்சருடன் அபாரமாக ஆடினார். 
 
அதன் பிறகு டேர் டெவில் டேரன் சாமி புகுந்தார். ஆஸ்ட்ரேலியா அன்று போலவே ஸ்பின்னில் திணரி டாப் 3-யை இழக்க மீண்டும் மேக்ஸ்வெல்தான் அந்த அணிக்குக் கைகொடுத்தார். ஏரோன் பின்ச் 16 ரன்னில் சாமுயெல்ஸ் பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்ய முயன்று காலியானார். வார்னர் 20 ரன்னில் சாம்யேல் பத்ரியின் ஒரு நேர் பந்துக்கு ஸ்டம்பை இழந்தார்.
சுனில் நரைனின் அற்புத பந்துக்கு வாட்சன் பீட்டன் ஆகி 8 பந்தில் 2 ரன்னுடன் ஸ்டம்ப்டு ஆகி பெவிலியன் திரும்பினார். வாட்சன் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாம் ஏனெனில் விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்தின் முதல் முறை அடித்து பைல்களை மிஸ் செய்து பிறகுதான் அடித்தார். ஆனாலும் வாட்சன் கிரீசில் காலை சரியாக வைக்கவில்லை.
 
பெய்லியும் சொதப்ப ஆஸ்ட்ரேலியா 77/4 என்று ஆனது. ஆனால் மேக்ஸ்வெல் ஒன்றும் கவலையில்லாமல் ஆடினார் லாலி பாப் பவுலர் சாமியை 16 ரன்கள் அடித்து பிறகு பத்ரியை ஒரு சிக்ஸ் சாமுயேல்ஸை ஒரு சிக்ஸ். பாகிஸ்தானை கொன்றது போன்று இன்று கொல்லவில்லையென்றாலும் 22 பந்தில் 45ரன்கள் எடுத்து டிவைன் பிராவோவிடம் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
 
பிறகு T20 மாஸ்டர் பேட்ஸ்மென் பிராட் ஹாட்ஜ் களமிறங்கி 35 ரன்கள் அடித்தார். இவரும் நரைன் பந்தில் பவுல்டு ஆனார்.  டேரன் சாமி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.