வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 27 மார்ச் 2014 (12:46 IST)

ஐபிஎல். கிரிக்கெட் சுத்தமாகும் வரை தடை விதிக்கவேண்டும் - ஷஷான்க் மனோகர்

ஆட்டத்தில் நேர்மையும், மக்களின் நம்பிக்கையையும் ஐபிஎல் கிரிக்கெட் சம்பாதிக்கும் வரை அதனை நடத்த தடை விதிப்பதே நல்லது என்று முன்னாள் பிசிசிஐ தலைவர் ஷஷான்க் மனோகர் கூறியுள்ளார்.

 
அனைத்து ஐபிஎல் போட்டிகளின் நேர்மை பற்றியும் விசாரணை செய்யவேண்டும் என்று கூறும் அவர் 7அவது ஐபிஎல். தொடரை ஐக்கிய அரபு நாடுகளில் நடத்துவது ஏற்கனவே நாறிப்போன ஐபிஎல் கிரிக்கெட்டை மேலும் நாறடித்து விடும் என்று கடுமையாக சாடியுள்ளார்.
 
அவர்  கூறியிருப்பதாவது

ஐபிஎல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் விதம் குறித்து மிகவும் சீரியசான குற்றசாட்டுகள் விசாரணை அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது, மேலும் சீனிவாசன் பதவி விலகவும் அறிவுறுத்தியுள்ளது. நான் நீண்ட காலம் முன்பே கூறினேன், ஊழல் என்று வந்து விட்டால் அனைத்து போட்டிகளையும் விசாரணைக்கு உட்படுத்துவதே சிறந்தது. 
 
மேலும் சிபிஐ விசாரணையும் வைக்கவேண்டும் ஏனெனில் நாடு முழுதும் ஐபிஎல். போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
 
ஐபிஎல் முறைகேடுகள் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இப்போது பிசிசிஐ-யில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நிலவரங்களை மனதில் கொண்டு உண்மையில் கூறுகிறேன், ஐபிஎல் கரை அழிக்கப்படும் வரை அதனை நடத்த தடை விதிக்கவேண்டும். 
 
என்றார் ஷஷான்க்.
 
மற்றொரு பிசிசிஐ தலைவர் ஐ.எஸ். பிந்த்ரா, "ஒரு தனி மனிதனைன் அதிகார மோகத்திற்காக கிரிக்கெட் ஆட்டம் மதிப்பிழப்பது வெட்கக் கேடானது" என்று சீனிவாசன் மீது காட்டம் காட்டியுள்ளார்.
 
இவ்வளவையும் மீறி, உச்சநீதிமன்றம் வயிற்றை குமட்டுகிறது என்று கூறியும் பதவியைத் தக்கவைக்க சட்ட ஆலோசனை நடத்தி வருகிறாராம் சிமெண்ட் சீனிவாசன்.