1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 16 அக்டோபர் 2015 (19:07 IST)

’ஜாகிரின் ஓய்வை கேட்டதும் ஸ்தம்பித்துவிட்டேன்’ - இஷாந்த் சர்மா உருக்கம்

ஜாகிர் கானின் ஓய்வை கேட்டதும் நான் ஸ்தமித்து போய்விட்டேன் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா கூறியுள்ளார்.
 

 
இது குறித்து இஷாந்த் சர்மா கூறுகையில், “நான் நேற்று பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் ரஞ்சி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தேன். நான் பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது, ஜாகிர் கான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த செய்தியை கேட்டேன்.
 
இது என்னை வேறொரு உணர்விற்கு கொண்டு போய்விட்டது. நான் வீட்டிற்கு சென்றதும் அவருடன் நான் அவருடன், இந்திய அணிக்காக செலவளித்த கடந்த கால அனுபவங்களை அசைபோட்டேன். அவருடன் விளையாடிய நாட்கள், பந்துவீசிய நாட்கள், ஓய்வறையில் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் ஆகிய நினைத்துப் பார்த்தேன்.
 
எனது ஆரம்பகால கிரிக்கெட் போட்டிகளின்போது ஜாகிர்கான், நான் பந்துவீசுவதற்கு எவ்வளவு தூரம் உதவி செய்தார் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். அவர்தான் எனக்கு முன்னுதாரணம், அவர்தான் எனக்கு வழிகாட்டி. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு தான் அவர் எனது நெருங்கிய நண்பர் ஆனார்.
 
எனது வாழ்க்கையில் அவர் என் மீது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பது யாருக்கும் தெரியாது. என்னை ஒரு பந்துவீச்சாளராக அவர்தான் உருவாக்கினார். ஒரு சாதாரண பந்துவீச்சாளராக இருந்த என்னை, ஒரு முதிர்ச்சியான பந்துவீச்சாளராக உருவாக்கியது அவர்தான்.
 
நான் ஜாகிர்கானுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். அவர் எனக்கு எனக்கு செய்த எல்லாவற்றிற்கும், வெறும் நன்றிகளால் திருப்பிதர முடியாது” என்று உணர்ச்சி பெருக்கோடு கூறியுள்ளார்.