Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

300வது போட்டியா? உயிரோடு இருப்பதே சாதனைதான் - யுவராஜ் சிங்


Abimukatheesh| Last Updated: வியாழன், 15 ஜூன் 2017 (15:05 IST)
300வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள யுவராஜ் தான் உயிரோடு இருப்பதே பெரிய சாதனைதான் என உருக்கமாக கூறியுள்ளார்.

 

 
இந்திய அணியின் சிறந்த வீரர்களில் ஒருவராக யுவராஜ் சிங் இன்று வங்கதேச அணியுடன் விளையாட உள்ள போட்டி அவருக்கு 300வது ஒருநாள் போட்டியாகும். இந்த சாதனைக்காக பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 
 
யுவராஜ் சிங் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு தற்போது மீண்டும் இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் 300வது போட்டி குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
நான் உயிரோடு இருப்பதே சாதனைதான். நான் முதல் போட்டியில் ஆடியபோது சில போட்டிகளில் மட்டுமே விளையாடுவேன் என நினைத்தேன். இந்திய அணியில் இடம்பிடிப்பதை விட அதில் நீடித்து விளையாடுவதே சவாலானது. 
 
ஒரு கட்டத்தில் என்னால் விளையாட முடியுமா என்று நினைத்தேன். ஆனால் இன்று அதையெல்லாம் தாண்டி விளையாடி வருகிறேன் என்றார்.  


இதில் மேலும் படிக்கவும் :