வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 20 மார்ச் 2015 (13:43 IST)

உலகக் கோப்பை: ரோகித் நோ பால் சர்ச்சை - அவுட் கொடுக்காத அம்பயரின் உருவபொம்மை எரிப்பு

நேற்றைய உலகக் கோப்பை கால் இறுதி ஆட்டத்தில் ரோகித் சர்மாவிற்கு அவுட் கொடுக்காததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச ரசிகர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
11 ஆவது உலகக் கோப்பை போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் வங்கதேசம் - இந்தியா அணிகள் மோதின. இதில் வங்கதேச அணி இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்தது. இப்போட்டியில் ரோகித் சர்மா 90 ரன்கள் எடுத்து விளையாடிக்கொண்டிருந்த போது, ருபெல் ஹூசைனின் புல்டாஸ் பந்தை எதிர்கொண்டு கேட்ச் ஆனார். 
 
எனினும் நடுவர்கள் அவுட் கொடுக்காமல் நோ பால் என அறிவித்தனர். பந்து இடுப்பு பகுதிக்கு மேல் புல்டாசாக வீசப்பட்டதால் நடுவர்கள் அவுட் கொடுக்க மறுத்தனர். எனவே நடுவரின் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச ரசிகர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நடுவர்கள் இந்திய அணிக்கு சாதகமாக செயல்பட்டனர் என்று கூறி நடுவரின் உருவ பொம்மையை தீயுட்டு எரித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதேபோல் தவானின் பவுன்டிரி கேட்ச் குறித்தும் அதிருப்தி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.