செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2015 (12:56 IST)

உலகக் கோப்பை: அயர்லாந்தை திணறடித்து தென் ஆப்பிரிக்கா இமாலய ரன் குவிப்பு 411 / 4

இன்றைய உலகக் கோப்பை போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்க வீரர்களின் அசத்தல் சதத்தால் எதிரணிக்கு இமாலய ரன் இலக்கை நிர்ணயித்துள்ளது.
உலகக் கோப்பை போட்டியின் 24 ஆவது லீக் ஆட்டம்  கான்பெர்ராவில் நடந்தது. இதில் தென் ஆப்பிரிக்கா -அயர்லாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இதில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். தொடக்கத்திலேயே காக் ஒரு ரன்னில் ஏமாற்றினார். பின் இணைந்த டுபிளிஸ்சி மற்றும் ஆம்லா சிறப்பாக செயல்பட்டு அயர்லாந்து அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணியின் ரன் வேகம் கிடுகிடுவென உயர்ந்தது.  
தொடர்ந்து அசத்திய ஆம்லா சதத்தை கடந்தார். மறுமுனையில் டுபிளசியும் சிறப்பாக செயல்பட்டு சதத்தை எட்டினார். எனினும் 109 ரன்களில் டுபிளசி போல்ட் ஆனார். அசத்தல் ஆட்டத்தை வெளிபடுத்திக்கொண்டிருந்த ஆம்லா 128 பந்துகளில் 159 ரன்கள் சேகரித்து ஆட்டமிழந்தார். ஆக்ரோஷமாக செயல்பட்ட கேப்டன் டிவிலியர்ஸ் 9 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் இணைந்த மில்லர், ரோஸ்சொவ் ஜோடியும் அதிரடி காட்ட ஆரம்பித்தது.
 
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 411 ரன்கள் எடுத்தது. மில்லர் 46 ரன்களுடனும், ரோஸ்சவ் 61 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.