Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தொடரை கைப்பற்றுமா இந்தியா?


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 2 ஜூலை 2017 (20:11 IST)
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி இந்திய அணி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் 4வது ஒருநாள் போட்டியில் களமிறங்கியுள்ளது.

 

 
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் மழையால் ரத்தானது. 2வது மற்றும் 3வது போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றிப்பெற்றது. இன்று 4வது ஒருநாள் போட்டி நடைப்பெற்று வருகிறது.
 
இதில் இந்திய அணி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது. இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. இருந்தாலும் தொடரை சம்ன் செய்யும் வாய்ப்பு உள்ளது. 
 
4வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் குவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :