வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2015 (22:44 IST)

டி வில்லியர்ஸ் அண்ட் கோ-விற்கு பதில் சொல்லுமா இந்தியா?

தென் ஆப்பிரிக்காவுடனான தொடரில் ஒரு வெற்றியைகூட அடைய முடியாமல் திணறி வருகிறது இந்திய அணி. மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்தது.
 

 
ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வெற்றியை நெருங்கி தோல்வியை தழுவியது. இந்நிலையில், நாளை இந்தூரில் இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்கவுள்ளது.
 
நிச்சயமாக இந்திய அணி மனதளவில் சோர்ந்திருக்கும். ஆனாலும், இந்திய அணியின் பேட்டிங் பலம் நிச்சயம் நாளை கைகொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். ஏனெனில், ரோஹித், தவான், ரஹானே, ரெய்னா, விராட் கோலி, தோனி, அம்பதி ராயுடு என பேட்டிங் பட்டாளமே உள்ளது.
 
பந்துவீச்சில் புவனேஷ் குமார், உமேஷ் யாதவ், அக்ஷர் பட்டேல், அமித் மிஸ்ரா, ஹர்பஜன் சிங் உள்ளனர். ஆனாலும், வலுவான தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள இன்னும் கடினமாக, துல்லியமாக பந்துவீச வேண்டும்.
 
ஏனெனில், இந்திய அணியை போன்று தென் ஆப்பிரிக்க அணியிலும் ஹசிம் அம்லா, குவிண்டன் டி காக், டு பிளஸ்ஸி, டி வில்லியர்ஸ், டுமினி, பெஹார்டியன், டேவிட் மில்லர் என அதிரடிக்கும் பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
 
பந்துவீச்சிலும் கிறிஸ் மோரிஸ், மோர்னே மோர்கல், டேல் ஸ்டெய்ன், இமரான் தாஹிர், கெய்ல் அப்போட் என தாக்குதல் தொடுக்க வரிசையாக உள்ளனர். அதிலும் தென் ஆப்பிரிக்க அணியில் ஆல் ரவுண்டர்கள் நிறைய உள்ளனர்.
 
இதனால் இந்திய பழையை தோல்விகளை மறந்து புது தெம்புடன் தோனி அண்ட் கோ களமிறங்கும். தோனியை பொறுத்தவரை, தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு செயல்பாடுகள் மூலமாக பதிலடி கொடுப்பது வழக்கும். நாளை பதிலடியை எதிர்பார்க்கலாம்....