வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 20 அக்டோபர் 2014 (11:41 IST)

வெஸ்ட்இண்டீஸ் தொடர் ரத்து: கிளைவ் லாயிட் மன்னிப்பு கேட்டார்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரிக்கெட் தொடர் பாதியில் ரத்தானதால் அந்நாட்டு முன்னாள் கேப்டனும், தேர்வு குழு தலைவருமான கிளைவ் லாயிட் மன்னிப்பு கேட்டுள்ளார்.
 
சமீபத்தில் இந்தியா வந்திருந்த வெஸ்ட்இண்டீஸ் அணி இங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி, ஒரு 20 ஓவர் போட்டி, 3 டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் பங்குபெற இருந்தது. இந்நிலையில் சம்பள பிரச்சினை காரணமாக அந்த அணி 4 ஆவது ஒருநாள் போட்டியோடு இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்து விட்டு நாடு திரும்பியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய கிரிக்கெட் வாரியம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் ரூ.400 கோடி இழப்பீடு கேட்க திட்டமிட்டுள்ளது.
 
இந்நிலையில் கிரிக்கெட் தொடர் பாதியில் ரத்தானதால் அந்நாட்டு தேர்வு குழு தலைவர் கிளைவ் லாயிட் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,  இந்திய சுற்றுப்பயணம் பாதியில் ரத்தானதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 
 
மேலும் இவ்விவகாரத்தால் இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையேயான நட்புறவு பாதிக்காது என்று நினைக்கிறேன் என கிளைவ் லாயிட் கூறியுள்ளார்.