வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 9 அக்டோபர் 2014 (09:38 IST)

முதல் ஒரு நாள் போட்டி: 124 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது. 
 
இந்தியா வந்துள்ள -வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி, 3 டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி ஆகியவற்றில் பங்குபெறவுள்ளது. இந்நிலையில் அக், 8 நேற்று முதல் ஒரு நாள் போட்டி நடந்தது.
 
இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி வெஸ்ட் இண்டீஸ் அனியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். 
 
தொடக்க ஆட்டக்காரர்களான சுமித் 46 ரன்களும், பிராவோ 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின் இணைந்த சாமுவேல்ஸ் இந்தியாவின் பந்துவீச்சை நொருக்கித் தள்ள இதன் விளைவு சாமுவேல்ஸின் சதம். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 321 ரன்களை எடுத்தது. ஆட்டமிழக்காமல் இருந்த சாமுவேல்ஸ் 116 பந்துகளில் 126 ரன்கள் எடுத்து அசத்தல் ஆட்டத்தை வெளிபடுத்தினார். இந்தியா சார்பில் சமி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 
 
பின்னர் 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தனது இன்னிங்சை தொடங்கியது இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரர் ரகேனா 24 ரன்கள் எடுத்தபோது ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார். பின் வந்த கோலி 2 ரன்களிலும், ராயுடு 2 ரன்களிலும், ரெய்னா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
 
கேப்டன் தோனியும் 8 ரன்களில் வெளியேற இந்திய அணி தடுமாறியது. இறுதியில் இந்திய அணி 41 ஓவர்களில் 197 ரன்கள் எடுத்துஆல்-அவுட் ஆனது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.