வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2016 (14:31 IST)

தண்ணீர் பஞ்சம் நிலவும்போது ஐபிஎல் போட்டியை ஏன் நடத்துகிறீர்கள்? - உயர்நீதிமன்றம் கேள்வி

ராஜாஸ்தானில் தண்ணீர் பஞ்சம் நிலவி வரும்போது ஜெய்பூருக்கு ஏன் ஐபிஎல் போட்டிகளை மாற்றியுள்ளீர்கள் என்று ராஜாஸ்தான் மாநில அரசுக்கும், பிசிசிஐக்கும் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
 

 
கடந்த சில நாட்களுக்கு முன்பாக, மும்பை உயர்நீதிமன்றமத்தில் ஒருவர், “குடிக்க நீரின்றிச் சாகும் மக்கள் அவதியுறும் சமயத்தில், இப்படி ஒரு விளையாட்டா?’’ என்று கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.
 
இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மும்பை உயர்நீதிமன்றம், ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு மகாராஷ்டிர மாநிலத்தில் எங்கும் நடைபெறக்கூடாது; வேண்டுமானால், வேறு மாநிலத்தில் எங்காவது நடத்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியது.
 
இதனால், ஐபிஎல் போட்டிகள் ராஜஸ்தான் மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதற்கு எதிராக, அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
 
இதனை விசாரித்த ராஜஸ்தான் நீதிமன்றம், ராஜஸ்தானில் தண்ணீர் பஞ்சம் நிலவி வரும்போது ஜெய்பூருக்கு ஏன் ஐபிஎல் போட்டிகளை மாற்றியுள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
 
மேலும், இது தொடர்பாக மாநில அரசுக்கும், பிசிசிஐக்கும், பொது சுகாதார பொறியியல் துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை ஆகியவைக்கும் உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இதனால், மஹராஷ்டிரா மாநிலத்தை தொடர்ந்து ராஜஸ்தானில் நடைபெறவுள்ள போட்டிகளும் மாற்றப்படும் நிலை ஏற்படவுள்ளது.