வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 24 மார்ச் 2015 (18:58 IST)

”நாங்கள் இங்கே எல்லாவற்றையும் இழந்து விட்டது வேதனை அளிக்கிறது” - டி வில்லியர்ஸ்

நாங்கள் இங்கே எல்லாவற்றையும் இழந்து விட்டோம். இது வேதனை அளிக்கிறது என்று தென் ஆப்பிரிக்கா கேபடன் டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
 
உலக்கோப்பை போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டி ஈடன் பார்க் மைதானத்தில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்காவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
 

 
தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் டி வில்லியர்ஸ், ”கிரிக்கெட்டில் இது ஒரு அற்புதமான போட்டி. என்னுடைய வாழ்நாளில் இதுபோன்ற ஆரவாரமான ரசிகர்களின் மின்னொலியை நான் கேட்டது கிடையாது. சிறந்த அணி மேலே செல்லும் என்று நான் யூகித்தேன். 
 
நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். எந்த வருத்தமும் இல்லை. நாங்கள் இங்கே எல்லாவற்றையும் இழந்து விட்டோம். இது வேதனை அளிக்கிறது. இதிலிருந்து மீண்டு வர சில நாட்கள் ஆகும். எல்லாவற்றிலும் மோசமாக நாங்கள் எங்களுக்காக விளையாடவில்லை.
 
தென் ஆப்பரிக்க நாட்டு மக்களுக்கான நாங்கள் விளையாடினோம். இப்பொழுதுவரை அவர்கள் எங்களுக்காக பெருமைப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். எங்களுக்கு ஆதரவாக பிரமாணடமான நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்கள்.
 
நாங்கள் சிறந்த விஷயத்தோடு சென்று கொண்டிருப்பதாக உணர்கிறேன். மிகச்சிறந்த உணர்வோடு இருக்கிறோம். தனிப்பட்ட எந்த ஒரு ஆட்டக்காரரின் பங்களிப்பையும் குறிப்பிட விரும்பவில்லை. இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகளுக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.