செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Ashok
Last Modified: ஞாயிறு, 11 அக்டோபர் 2015 (18:40 IST)

கேப்டன் பதவியிருந்து தோனியை நீக்க வேண்டும்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடரை இழந்தது கடும் தோல்வி தழுவிய இந்திய அணி, கேப்டன் பதவியிலிருந்து தோனியை நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்துவருகின்றனர்.


 
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடரை இழந்ததால் தற்போது கேப்டன் தோனி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். இதனால் ஒரு நாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது பல்வேறு தரப்பினரிடம் இருந்து எழுந்துள்ளது.
டெஸ்ட் கேப்டனாக இருக்கும் வீராட்கோலியை ஒரு நாள் போட்டிக்கும் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வு குழு உறுப்பினர் மொகிந்தர் அமர்நாத் வலியுறுத்தி உள்ளார். 
 
தற்போது, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான இயன்சேப்பல் இந்திய அணி கேப்டனாக வீராட்கோலியை நியமிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து தெரிவித்ததாவது: டெஸ்ட் போட்டிக்கும், ஒரு நாள் போட்டிக்கும் கேப்டன் பதவியை ஒருவரையெ நியமிக்கலாம். இருபோட்டிக்கும் கேப்டன் பதவு ஓரளவு ஒத்துப்போகும் நிலைதான் இருக்கிறது. இதனால் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக பணியாற்றும் வீராட்கோலியை ஒருநாள் போட்டிக்கும் கேப்டனாக நியமிக்கலாம் என்றும் கோலியும், இந்திய அணியும் இதில் விருப்பத்துடன் இருக்க வேண்டும் என்றும் 
 
பல்வேறு அனுபவங்களையும், பாடங்களை கற்று தேர்ந்தவர்தான்  சிறந்த கேப்டனாக இருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.