வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 15 ஜூலை 2014 (15:01 IST)

ஐசிசி ஒரு நாள் போட்டி தரவரிசையில் விராட் கோலி 2 ஆவது இடம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸிலும் விராட் கோலி ரன் குவிக்கத் தவறிய போதும், ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 2 ஆவது இடத்தில் நீடிக்கிறார்.
 
சர்வதேச அரங்கில் ஒருநாள் ஆட்டத்தில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி துபையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரர் ஆம்லா, கோலியுடன் 2 ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டார்.
 
தோனி தொடர்ந்து 6 ஆவது இடத்தில் நீடிக்கிறார். ஷிகர் தவன் 10 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். பந்து வீச்சாளர்கள் வரிசையில் ஜடேஜா மட்டுமே முதல் பத்து இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளார். பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் முதலிடத்தில் உள்ளார்.