செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2016 (08:43 IST)

கோலி முதலிடம், இந்தியா இரண்டாவது இடம்: டி20 தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி

20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி. இதில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி 837 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். முதல் பத்து இடங்களில் இடம் பெற்றிருக்கும் ஒரே இந்திய வீரரும் இவர் தான்.


 
 
வீரர்கள் தரவரிசை:-
 
1. விராட் கோஹ்லி (இந்தியா) - 837 புள்ளிகள்
 
2. ஆரோன் பின்ச் (ஆஸ்திரேலியா) - 803 புள்ளிகள்
 
3. மார்டின் குப்தில் (நியூசிலாந்து) - 754 புள்ளிகள்
 
4. ஜோ ரூட் (இங்கிலாந்து) - 750 புள்ளிகள்
 
5. டூ பிளசிஸ் (தென் ஆப்ரிக்கா) - 741 புள்ளிகள்
 
6. கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) - 719 புள்ளிகள்
 
7. அலெக்ஸ் ஹால்ஸ் (இங்கிலாந்து) - 696 புள்ளிகள்
 
8. கிரிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்) - 696 புள்ளிகள்
 
9. எம் சேசாத் (ஆப்கானிஸ்தான்) - 674 புள்ளிகள்
 
10. சேன் வாட்சன் (ஆஸ்திரேலியா) - 664 புள்ளிகள்
 
ஐசிசி வெளியிட்டுள்ள இந்த டி20 போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி 128 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் நியூசிலாந்து அணி 132 புள்ளிகளுடன் உள்ளது.
 
அணிகள் தரவரிசை:-
 
1. நியூசிலாந்து - 132 புள்ளிகள்
 
2. இந்தியா - 128 புள்ளிகள்
 
3. வெஸ்ட் இண்டீஸ் - 122 புள்ளிகள்
 
4. தென் ஆப்ரிக்கா - 119 புள்ளிகள்
 
5. இங்கிலாந்து - 114 புள்ளிகள்
 
6. ஆஸ்திரேலியா - 110 புள்ளிகள்
 
7. பாகிஸ்தான் - 104 புள்ளிகள்
 
8. இலங்கை - 98 புள்ளிகள்
 
9. ஆப்கானிஸ்தான் - 78 புள்ளிகள்
 
10. வங்கதேசம் - 74 புள்ளிகள்.