செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 20 அக்டோபர் 2014 (18:41 IST)

ஐ.சி.சி தரவரிசைப்பட்டியல்: விராட் கோலி 2 ஆவது இடம் பெற்றார்

ஒரு நாள் போட்டிகளில் சிறந்து செயல்படும் வீரர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி 2 ஆவது இடத்தில் உள்ளார்.
ஒரு நாள் தொடர்களில் சிறப்பாக விளையாடிய வீரர்களின் தரவரிசைப்பட்டியலை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இதில் தென்னாப்பிரிக்க அணியின் டிவிலியர்ஸ் 869 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.
 
இதில் 853 புள்ளிகளுடன் விராட் கோலி 2 ஆவது இடத்தில் உள்ளார். மேலும் கேப்டன் தோனி 757 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 8 ஆவது இடத்திலும், மிடில் ஆடர் பேட்ஸ்மேன் ரெய்னா 15 ஆவது இடத்திலும் உள்ளனர்.  
 
பந்துவீச்சாளர்களை எடுத்துக்கொண்டால் 5 ஆவது இடத்திலிருந்த ஜடேஜா 6 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். புவனேஸ்வர் குமார் டாப் 10 இடத்தில் நுழைந்து 7 ஆவது இடத்தில் உள்ளார். முகமது ஷமி முதல் முறையாக டாப் 20 க்குள் நுழைந்துள்ளார். ஷமி 16 இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.