திலகரத்னே தில்ஷன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (17:31 IST)
இலங்கை அதிரடி வீரர் திலகரத்னே தில்ஷன் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
 
 
ஆஸ்திரேலியாவுடன் தற்போது நடைபெற்றுவரும் ஒருநாள் தொடருடன் தான் ஓய்வுபெற இருப்பதாக தில்ஷன் அறிவித்துள்ளார். இலங்கை அணியின் ஆல்ரவுண்டராக ஜொலித்தவர் தில்ஷன்.
 
கடந்த 1999ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான தில்ஷன் இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 சதங்கள், 23 அரைச்சதங்கள் உட்பட 5492 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 39 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள தில்ஷன் 88 கேட்சுகளையும் பிடித்துள்ளார்.
 
அதேபோல, அதே ஆண்டு நவம்பர் மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான தில்ஷன் இதுவரை 329 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 சதங்கள், 47 அரைச்சதங்கள் உட்பட 10,248 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 106 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள தில்ஷன் 122 கேட்சுகளையும் பிடித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :