வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : சனி, 5 ஏப்ரல் 2014 (11:58 IST)

என்னுடைய சிறந்த T20 இன்னிங்ஸ் - கோலி

தென் ஆப்பிரிக்காவை நேற்று வீட்டுக்கு அனுப்பிய அதி அற்புத 72 நாட் அவுட் இன்னிங்ஸை விராட் கோலி தன்னுடைய சிறந்த T20 இன்னிங்ஸ் என்று வர்ணித்துள்ளார். 
"இந்த ஆட்டத்தின் முக்கியத்துவத்தை வைத்துப் பார்க்கும்போது, ஆம்! இதுதான் எனது சிறந்த T20 இன்னிங்ஸ் என்கிறார் கோலி. ஆனால் இந்தப் போட்டியைவிட மற்ற போட்டிகளில் பந்துகளை நான் சிறப்பாக அடித்தேன், ஒரு 5 அல்லது 6 பவுண்டரிகளை இறங்கியவுடன் அடித்துவிடுவேன், ஆனால்  அது கடினமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் நான் கடுமையாக ரன்களுக்கு போராடவேண்டியதாயிற்று, அதனாலேயே இது எனது சிறந்த T20 இன்னிங்ஸ்.

அணி அரையிறுதிக்குள் நுழைந்து விட்டது. நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும். கடைசி வரை நிற்பது என்பது முதலிலேயே முடிவான விஷயம்.
நெருக்கடி இல்லை என்று கூற முடியாது, ஆனால் அதனை எதிரணியினர் சுலபத்தில் கண்டுபிடித்து விட அனுமதிக்கக் கூடாது என்பது முக்க்யம். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு உலகத் தரம் வாய்ந்தது. அவர்கள் எதிரே சிறு தவறு கூட பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
 
நான் இறங்குவதற்கு முன்பு எந்த ரன் விகிதத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை எப்போதும் பார்ப்பேன். ஆனால் தென் ஆப்ப்ரிக்காவுக்கு எதிராக நல்ல துவக்கம் கண்டோம். முதல் 3 ஓவர்களில் ஓவருக்க்கு 10 ரன் என்ற விகிதத்தில் சென்றோம். இத்வே ஓவருக்கு 6 ரன்கள்தான் இருந்திருந்தால் நான் விரைவில் ரன் குவிக்க் எத்தனித்து அவுட் கூட ஆகியிருப்பேன். 

இதில் திட்டமிடுதல் தேவை அவர்களது முக்கிய பவுலர்களுக்கு எவ்வளவு ஓவர்கள் உள்ளன. பகுதி நேர பவுலர்கள் எவ்வளவு ஓவர்கள் வீசுவார்கள், யாரை அடிக்க தேர்ந்தெடுப்பது என்று திட்டமிடுதல் அவசியம். 
நான் 17 பந்துகளில் 20 ரன்களில் இருந்தேன். பவுண்டரி இல்லை. ஸ்ட்ரைக் ரேட்டை ரொடேட் செய்வது முக்கியம். ஒன்று இரண்டு என்று எடுத்துக் கொண்டிருந்தால், விக்கெட்டை விடாமல் இருந்தால் எதிரணி கேப்டன் ஏதாவது வித்தியாசமாக யோசிப்பார் நாம் கடைசி பந்தில் பவுண்டரி அடிக்கலாம் அந்த ஓவர் ஒரு நல்ல ஓவராக நமக்கு அமையும். ஆகவே T20 கிரிக்கெட்டிலும் சிங்கிள், இரண்டுகள், மிக முக்கியமானது.
டேல் ஸ்டெய்ன் போன்ற மிகச்சிறந்த பவுலர்களுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டும். அவரை விக்கெட் எடுக்கவே கொண்டு வருவார்கள் ஆனால் நம் ஒரு 6 அல்லது 7 ரன்களை அவர் பந்து வீசில் எடுத்து விட்டால் எதிரணி கேப்டன் வெறுப்படைவார்.
 
வெற்றி ரன்களை தோனியே அடித்திருக்கலாம் அப்படித்தான் நானும் கூறினேன் ஆனால் இந்தப் போட்ட்யில் நான் உனக்கு வேறு எதையும் கொடுக்க முடியாது சிறப்பாக விளையாடிய நீதான் வெற்றி ரன்களையும் அடிக்கவேண்டும் என்றார்.
 
வெற்றிக்கான ரன்களை அடிக்கும்போது மனது உற்சாமகடைகிறது. இதற்கு வாய்ப்பளித்த கேப்டன் தோனிக்கு நன்றி.
 
இவ்வாறு கூறினார் தோனி.