வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 19 மார்ச் 2016 (18:11 IST)

இரண்டு வங்கதேச வீரர்களுக்கு தடை: முறைகேடாக பந்து வீசியதால் ஐசிசி நடவடிக்கை

இரண்டு வங்கதேச வீரர்களுக்கு தடை: முறைகேடாக பந்து வீசியதால் ஐசிசி நடவடிக்கை

வங்கதேச இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அராபத் சன்னி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் டஸ்கின் அகமது ஆகியோர் விதிமுறைக்கு மாறாக பந்து வீசுவதால் அவர்கள் இருவருக்கும் தற்காலிக தடை விதித்துள்ளது ஐசிசி.


 
 
கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியின் போது இவர்கள் இருவரின் பந்து வீச்சில் சந்தேகம் ஏற்பட்டது.
 
பாகிஸ்தானுக்கு எதிராக சூப்பர்-10 சுற்றில் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடிய அராபத் சன்னி, டஸ்கின் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தங்கள் பந்து வீச்சு முறையை மாற்றிய பின்னர் இந்த தடைக்கு எதிராக அவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 
இவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட அனுமதியை வங்கதேச கிரிக்கெட் வாரியம் கிடப்பில் வைத்துள்ளது. உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வரும் வேளையில் இவ்விரு வீரர்களுக்கும் ஐசிசி தடை விதித்துள்ளது. இவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை வங்கதேச கிரிக்கெட் சங்கம் இன்னமும் அறிவிக்கவில்லை.
 
அராபத் சன்னிக்கு பதிலாக சகுலின் சஜிப் அல்லது சஞ்ஜுமுல் இஸ்லாம் உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது. முறைகேடான பந்து வீச்சில் வங்கதேச வீரர்களுக்கு தடை விதிப்பது இது முதன் முறையல்ல.
 
இதற்கு முன்பு சோஹக் கஸி என்ற ஆஃப் ஸ்பின்னர் 2014 அக்டோபரிலும், இடக்கை ஆஃப் ஸ்பின்னர் அப்துர் ரஸ்ஸாக் 2008 நவம்பரிலும் முறைகேடாக பந்து வீசியதால் தடை செய்யப்பட்டார்கள்.