வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 3 ஏப்ரல் 2014 (20:16 IST)

T20 உலகக் கோப்பை: இலங்கை 20 ஓவரில் 160/6

இலங்கை அணி மேற்கிந்திய அணிகளுக்கு எதிராக 20 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதியில் முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ளது.
 
திரிமன்ன 35 பந்துகளில் 44 ரன்கள் எடுக்க ஆஞ்சேலோ மேத்யூஸ் 23 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார்.
 
49/3 என்ற நிலையிலிருந்து இந்த நிலைக்கு உயர இவர்கள் இருவர் இன்னிங்ஸே காரணம். பத்ரி 2 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்தாலும் கடைசி 2 ஓவர்களில் 3 ரன்களுடன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். நரைன் 4 ஓவர் 20 ரன்கள்.
 
வெஸ்ட் இண்டீஸ் துவங்கி முதல் ஓவரிலேயே 17 ரன்கள். விக்கெட் இல்லை.