1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 28 ஜனவரி 2015 (18:47 IST)

சுனில் நரைன் உலகக்கோப்பை போட்டியிலிருந்து விலகல்

உலக கோப்பை போட்டியில் இருந்து வெஸ்ட் இன்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் திடீரென விலகியுள்ளார். 
 
வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் சுனில் நரைன் உலக கோப்பை போட்டியில் இருந்து சுனில்நரீன் விலகுவதாக வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
 
சாம்பியன் லீக் டி-20 போட்டியின்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வந்த சுனில் நரைனின் (26) பந்து வீச்சு குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டது. அவரது பந்து வீச்சு முறையற்றதாக இருப்பதாக புகார் எழுந்தது.
 
இந்நிலையில், தனது பந்து வீச்சை சரி செய்வதற்காக சுனில்நரீன் உலக கோப்பையில் இருந்து விலகியுள்ளார் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுனில் நரைன், “நான் உலகக்கோப்பை போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளேன். அதே நேரத்தில் இன்றைய தேதிவரையில் என்னுடைய நடவடிக்கை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.