வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (08:35 IST)

தோனி தலைமையில் இந்திய அணி நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது - கவாஸ்கர்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்தியா 1 - 3 என்று படு தோல்வியடைந்ததையடுத்து இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என்று சுனில் கவாஸ்கர் கடுமையாகச் சாடியுள்ளார்.
 
5 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 244 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.
 
"இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் ஆட விருப்பம் இல்லையா? டெஸ்ட்டை விட்டு விலகி விடுங்கள், ஒருநாள் கிரிக்கெட் மட்டும் ஆடுங்கள். ஒரு நாட்டை இப்படி தர்மசங்கடப்படுத்தக் கூடாது” என்று பிபிசி வானொலியின் டெஸ்ட் போட்டி ஸ்பெஷல் நிகழ்ச்சியில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 
இங்கிலாந்தைப் பொறுத்தவரை அனைத்தும் டாப்-கிளாஸ். இந்திய அணி மிகவும் மோசமாக ஆடியது. ஆகவே இங்கிலாந்து இந்த வெற்றிகளைக் கண்டு அதீத தன்னம்பிக்கை கொள்ள வேண்டாம். இதைவிட பெரிய சோதனைகள் அந்த அணிக்குக் காத்திருக்கிறது.
 
இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற மைக்கேல் வான் “நாட்டிற்காக போராடும் குணம் இந்த இந்திய வீரர்களிடத்தில் இல்லை” என்று சாடியுள்ளார்.