வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Ashok
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2015 (18:17 IST)

ஐபிஎல்: புதிய அணிகளுக்கான ஏலத்தில் 12 நிறுவனங்கள்

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிய அணிகளை ஏலத்தில் எடுக்க 12 நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.


 

 
கடந்த முறை ஐபிஎல் தொடரில் ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதித்தது. இதனால் 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளில் இந்த 2 அணிகளும் விளையாட முடியாது
 
இந்த அணிகளுக்கு பதிலாக 2 புதிய அணிகளை இரண்டு ஆண்டுக்கு மட்டும் ஏலத்தில் விட கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. இதற்கான அடிப்படை விலை 40 கோடி ரூபயாக நிர்ணயம் செய்யப்பட்டது. புதிய ஐ.பி.எல். அணிகளை ஏலத்தில் எடுப்பதற்கான நடைமுறை கடந்த 16ஆம்தேதி தொடங்கி உள்ளது. இரு அணிகளை வாங்க விரும்பும் நிறுவனங்கள் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றன. டெண்டர் நடைமுறைகளை நேற்றுடன் முடிவடைந்தன.
 
12 நிறுவனங்கள் டெண்டர் விண்ணப்பங்களை பெற்றுள்ளதாக கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையை சேர்ந்த செட்டிநாடு குரூப், ஸ்க்டூஹலாவின் யூனிலேசர், வீடியோகான், குரூப் எம், இன்டெக்ஸ் மொபைல், உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் டெண்டர் விண்ணப்பங்களை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இதனால் 2 புதிய அணிகளை ஏலத்தில் எடுக்க 12 நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக 9 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் கொச்சி, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
2 புதிய ஐ.பி.எல். அணிகள் குறித்த விவரம் வருகிற 8ஆம் தேதி அறிவிக்கப்படும், அன்றைய தினம் புதிய அணிகளுக்கு ஏலம் நடக்கிறது என்று கூறப்படுகிறது.