1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 15 ஜனவரி 2017 (17:16 IST)

இங்கிலாந்து இமாலய ரன் குவிப்பு: சாதிப்பாரா கோலி!

இங்கிலாந்து இமாலய ரன் குவிப்பு: சாதிப்பாரா கோலி!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி இன்று புனேயில் தொடங்கியது. இந்த போட்டியில் கோலி தலைமையில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது.


 
 
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 350 ரன்களை குவித்தது. தொடக்க வீரராக களம் இறக்கிய ராய் 61 பந்துகளை சந்தித்து 73 ரன்களை குவித்து சிறப்பான அடித்தளம் கொடுத்தார். இங்கிலாந்து வீரர்கள் இந்திய பந்து வீச்சாளர்களை மிகவும் நேர்த்தியாக எதிர்கொண்டனர்.
 
கடைசி 10 ஓவர்களை இங்கிலாந்து வீரகள் சிறப்பாக பயன்படுத்தி முடிந்த அளவுக்கு ரன்களை சேர்த்தனர். ஜோ ரூட் 78 ரன்களும் பென் ஸ்டோக்ஸ் 40 பந்துகளில் 5 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 62 ரன்னும் குவித்தார்.
 
பென் ஸ்டோக்ஸின் அதிரடி ஆட்டம் இங்கிலாந்தை வலுவான இலக்கை நிர்ணயிக்க உதவியது. இந்திய அணி தரப்பில் பாண்டியா, பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பின்னர் கோலி தலைமையில் முதன் முறையாக இந்திய அணி களம் இறங்கியுள்ளது. இதனால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றது. முதல் போட்டியில் வெற்றி பெற்று சாதிப்பாரா கோலி என மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணி 351 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை துரத்த தயாராக உள்ளது.