வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 26 மார்ச் 2015 (13:18 IST)

ஸ்டீவ் ஸ்மித்தின் அபார சதத்தால் ஆஸ்திரேலியா 328 ரன்கள் குவிப்பு

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தின் அபார சதத்தால் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் குவித்துள்ளது.
 
ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 

 
அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் வார்னர் 7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து வெளியேறினார். அற்புதமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித 89 பந்துகளில் [10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] சதம் விளாசியனார்.
 
அதேபோல மற்றொரு தொடக்க வீரரான ஆரோன் பிஞ்ச் 5 பவுண்டரிகள் உட்பட அரைச்சதம் எடுத்தார். பின்னர் சிறிது நேரத்தில் ஸ்டீவ் ஸ்மித் 105 ரன்கள் [11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] எடுத்த நிலையில் அவுட்டானார். இருவரும் இணைந்து 2ஆவது விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்தனர்.
 

 
பிறகு களமிறங்கிய மேக்ஸ்வெல் வழக்கம்போல அதிரடியில் ஈடுபட்டார். ஆனால் அதிகநேரம் தாக்குப்பிடிக்க்கவில்லை. அவர் 14 பந்துகளில் [3 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆரோன் பிஞ்ச் 81 ரன்கள் குவித்து வெளியேறினார். கேப்டன் கிளார்க்கும் 10 ரன்களில் வெளியேறினார்.
 
197 ரன்களுக்கு 2 விக்கெட்டை மட்டுமே இழந்திருந்த ஆஸ்திரேலியா 248 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஆட்டம் இந்தியாவின் கட்டுக்குள் வருவதுபோல் இருந்தது. ஆனால் ஃபால்க்னரும், வாட்சனும் விக்கெட் வீழ்ச்சியை தடுத்தனர். ஃபால்க்னர் அதிரடியாகவும் ஆடினார். அவர் 12 பந்துகளில் [3 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 21 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
 
பிறகு வாட்சன் 30 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார். கடைசியாக இறங்கிய மிட்செல் ஜான்சன் தான் சந்தித்த முதல் 3 பந்துகளையும் பவுண்டரிக்கு ஓடவிட்டார். இதனால் ஆஸ்திரேலிய 300 ரன்களை கடந்தது.
 
50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் குவித்தது. ஜான்சன் 9 பந்துகளில் 27 எடுத்தார். ஹாடின் 7 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.