வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : வியாழன், 26 ஜூன் 2014 (15:55 IST)

ஐசிசி தலைவராக சீனிவாசன் தேர்வு

சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஐசிசி வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவராக சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். 
 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சூதாட்டம் குறித்து விசாரணை நடத்தி வரும் முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் கமிட்டி என்.சீனிவாசன் மற்றும் 12 பேர் மீது முதல் கட்ட விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டி இருந்தது. விசாரணை முடியும் வரை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து என்.சீனிவாசன் விலகி இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசன், ஐசிசி  தலைவராக போட்டியிட தடை விதிக்க வேண்டும் என கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஐசிசி தலைவர் பதிவிக்கு போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் பீகார் கிரிக்கெட் சங்கம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
 
நீதிபதிகள் விக்ரமாஜித் சென் மற்றும் சிவா கிர்தி சிங் முன்னிலையில் இந்த மனு விசாரனைக்கு வந்தது. இந்த மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதிகள், கடந்த வாரம் உச்ச மன்ற பெஞ்ச் மறுத்த நிலையில் மீண்டும் விசாரிக்க கோருவது நியாமற்றது என்றும் அவசர வழக்காக மனுவை விசாரிக்க முடியாது எனவும் தெரிவித்துவிட்டனர்.