வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Ashok
Last Updated : திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (20:41 IST)

இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள்; இந்திய அணி தொடரை கைப்பற்ற வாய்ப்பு

இலங்கை அணி ஆட்ட நேரம் முடிவில் 3 விக்கெட் இழப்பிக்கு 67 ரன்கள் எடுத்துள்ளதால், இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளது.
 

 
இலங்கைக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியின் 4வது நாளான இன்று இந்திய அணி அணைத்து விக்கெட்களும் இழந்து 274 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு வெற்றி இலக்கு 386 ஆக நிர்ணயித்துள்ள நிலையில் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது.
 
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 312 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இலங்கை அணி 201 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி நேற்று 3 விக்கெட் இழப்பிற்க்கு 21 ரன்கள் எடுத்திருந்தது.
 
இந்நிலையில் இன்று 4ஆவது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய விராட் கோலி 21 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஆனால் மறுமுனையில் நிதானமாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். 
அதன்பின் வந்த அஸ்வின் 58 ரன்களையும், ஸ்டூவர்ட் பின்னி 49 ரன்களும், ஓஜா 35 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். இறுதியில் இந்தியா அணி 76 ஒவர்களில் 274 ரன்களுக்கு அணைத்து விக்கெட்களையும் இழந்தது. இலங்கைக்கு வெற்றி இலக்காக 386 ரன்களை இந்தியா அணி நிர்ணயித்துள்ளது.
 
இதனை தொடர்ந்து இலங்கை அணி விளையாடியது. ஆரம்பம் முதல் தடுமாற்றத்துடன் விளையாடி வந்த இலங்கை அணி ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது. நாளை கடைசி நாள் என்பதால், வெற்றி இலக்கான 319 ரன்கள் என்ற கடுமையான இலக்கை இலங்கை அணி துரத்திப் பிடிப்பது சிரமமே.
 
ஆகையால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 2 -1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றும்.