வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 11 அக்டோபர் 2015 (18:42 IST)

5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி; ரோஹித்தின் 150 ரன்கள் வீண்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்தது.
 

 
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
 
இதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஜோடிகளான குவிண்டன் டி காக் (29), ஹசிம் அம்லா (37) எடுத்து வெளியேறினர். பின்னர் களமிறங்கிய டு பிளஸ்ஸி 62 ரன்கள் [5 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] எடுத்தார். அடுத்த வந்த மில்லர் (13) எடுத்து வெளியேறினார்.
 
அதன் பிறகு டி வில்லியர்ஸ் களமிறங்கினார். ஒருகட்டத்தில், தென் ஆப்பிரிக்கா அணி 41 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. அப்போது டி வில்லியர்ஸ், 54 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 50 ரன்களை தொட்டார். அதன் பிறகு கதையை மாற்றிப்போட்டார் டி வில்லியர்ஸ்.
 

 
இதற்கிடையில், டுமினி (15) ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த 5 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா அணி 50 ரன்கள் எடுத்து 250-ஐ தொட்டது. டி வில்லியர்ஸுக்கு துணையாக பெஹார்டியனும் இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தார்.
 
டி வில்லியர்ஸ் இந்திய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். 50ஆவது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து, சதத்தை நிறைவு செய்தார். தென் ஆப்பிரிக்கா அணி 300 ரன்கள் எட்டவும் உதவினார். தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்தது.
 
டி வில்லியர்ஸ் 73 பந்துகளில் 104 [5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்] எடுத்தார். முதல் 50 ரன்கள் எடுக்க 54 ரன்கள் எடுத்துக்கொண்ட டி வில்லியர்ஸ், அடுத்த 50 ரன்களை கடக்க 19 ரன்கள் மட்டுமே எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 23 ரன்கள் எடுத்து வெளியேறினாலும், ரோஹித் சர்மாவும், ரஹானே இணைந்து தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர்.
 
பின்னர் ரஹானே 60 ரன்கள் குவித்து பெஹார்டியன் பந்தில் வெளியேறினார். இருவரும் இணைந்து 2ஆவது விக்கெட்டுக்கு 149 ரன்கள் குவித்தனர். ரோஹித் சர்மா 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் தனது 8ஆவது சதத்தை பதிவு செய்தார்.
 

 
அடுத்து வந்த விராட் கோலி 11 ரன்களில் வந்த வேகத்தில் திரும்பினார். ஒருகட்டத்தில் இந்திய அணி 43.4 ஓவர்களில் 250 ரன்கள் குவித்திருந்தது. அப்போது 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்திருந்தது.
 
இதனால், இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று இந்திய ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். களத்தில் தோனியும், ரோஹித் சர்மாவும் இருந்தனர். ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி சிக்ஸரும், பவுண்டரியாமாக விளாசினார். இதன் மூலம் அவர் 150 ரன்கள் குவித்தார்.
 
இப்போது, கதை வேறு மாதிரியாக மாறியது. எதிர்பாராதவிதமாக அடுத்த பந்திலேயே ரோஹித் சர்மா, இம்ரான் தாஹிர் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ரெய்னா அடுத்து ஆட முயற்சித்து டுமினியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 
 
ஸ்டூவர்ட் பின்னி களமிறங்கினார். கடைசி 3 ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட்டது. 48ஆவது ஓவரில் 5 பந்துகளை சந்தித்த தோனி 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஸ்டூவர்ட் பின்னி லெக் மூலம் ஒரு ரன் எடுத்தார்.
 
இதனால், 2 ஓவர்களுக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரிலும் 5 பந்துகளில் ஒரு பவுண்டரி உட்பட 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னி ஒரு ரன் எடுத்தார். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இரண்டு அணியினரும் நெருக்கடிக்கு உள்ளானார்கள்.
 
இந்நிலையில் முதல் பந்தில் தோனி 2 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 33அவது பந்தில் பின்னி ஒரு ரன் எடுத்தார். 4ஆவது பந்தில் தோனி அடுட்டானார்.
 
இதனால், மைதானத்தில் நிசப்தம் நிலவியது. கடைசி 2 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. 5ஆவது பந்தில் பின்னியும் வெளியேறினார். கடைசி பந்தில் 7 ரன்கள் என்ற நிலையில், ஒரு ரன் மட்டும் எடுக்க 5 ரன்களில் இந்திய அணி தோல்வியை தழுவியது.