செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 24 மார்ச் 2015 (19:18 IST)

தென் ஆப்பிரிக்கா வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு கதறல்

தென் ஆப்பிரிக்கா அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்ததும் வீரர்கள் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதனர்.
 
ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொள்ளும் காட்சி
உலக்கோப்பை போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டி ஈடன் பார்க் மைதானத்தில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்காவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி முதன் முதலாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
 
கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை டேல் ஸ்டெய்ன் வீசினார். முதல் பந்தை வெட்டோரி எதிர்கொள்ள 1 ரன் எடுக்கப்பட்டது. அடுத்தப் பந்தை ஏலியட் பந்தை அடிக்கவில்லை. ஆனாலும் ’பை’ முறையில் 1 ரன் எடுக்கப்பட்டது.
 
மோர்னே மோர்கல் மைதானத்தில் அமர்ந்திருக்கும் காட்சி
மேலும் 4 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 3ஆவது பந்தை எதிர்கொண்ட வெட்டோரி பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 4ஆவது பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. இந்நிலையில் 2 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5ஆவது பந்தை எதிர்கொண்ட ஏலியாட் பந்தை சிக்ஸருக்கு அபாரமாக அடித்து வெற்றி இலக்கை எட்டினார்.

சோகத்தில் கண்ணீர் விடும் இம்ரான் தாஹிர்
மேலும் அடுத்தப் பக்கம்...
மைதானத்திலேயே அமர்ந்துவிட்ட டு பிளஸ்ஸிஸ்


அப்போது நியூசிலாந்து வீரர்களும் ரசிகர்களும் ஆர்ப்பரித்தனர். இதனால் மைதானமே அதிர்ந்தது அடங்கியது. ஆனால் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் மைதானதிலேயே கண்ணீர் விட்டு அழுதனர். ஸ்டெய்ன் சில நிமிடங்கள் அசையவே இல்லை.
 
பந்து சிக்ஸருக்கு பறந்ததும் ஸ்டெய்ன் மைதானத்தில் படுத்திருக்கும் காட்சி
டு பிளஸ்ஸிஸ் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. டி வில்லியர்ஸ் கண்களில் இருந்தும் அப்படித்தான். மோர்னே மோர்கல் மைதானத்திலேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.

மைதானத்தில் படுத்துக்கிடந்த டி வில்லியர்ஸ்

இம்ரான் தாஹிர், டி காக், ரோஸ்ஸவ் எல்லாருமே அப்படித்தான். அவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீள அவர்களுக்கு சிறிது நேரம் ஆனது என்றுதான் சொல்லவேண்டும்.

ஸ்டெய்னை தூக்கிவிடும் நியூசிலாந்து வீரர் ஏலியாட்