செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (16:47 IST)

ரஸா சதம்; நியூசிலாந்துக்கு எதிராக ஜிம்பாப்வே 235 ரன்கள் குவிப்பு

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில், சிக்கந்தர் ரஸாவின் சதத்தால் ஜிம்பாப்வே அணி 235 ரன்கள் குவித்துள்ளது.
 
நியூசிலாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் செய்ய பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
 

 
இதன்படி, பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர் மசகட்ஸா டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய எர்வின் (12), சகப்வா (2), சிகும்பரா (5) ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினர். நிதானமாக ஆடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சிபாபா 42 ரன்கள் எடுத்தார்.
 
இதனால், ஒரு கட்டத்தில் ஜிம்பாப்வே அணி 68 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனவே, அந்த அனி 100 ரன்களுக்குள் சுருண்டுவிடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், நிலைமை வேறாக மாறியது.
 
விளாசிய ரஸா:
 
இக்கட்டான நிலையில் களமிறங்கிய சிக்கந்தர் ரஸா அபாரமாக விளையாடினார். அவருக்கு சற்று நேரம் சீன் வில்லியம்சன் ஒத்துழைப்பு அளித்தார். ஆனாலும், சீன் வில்லியம்சன் (26), கிரேமர் (5), உட்செயா (0) ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர். அப்போது அணியின் எண்ணிக்கை 8 விக்கெட்டுக்கு 146 ரன்கள் என்றிருந்தது.
 
ஆனால், 9ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய பன்யங்கராவும், ரஸாவும் அணியின் எண்ணிக்கை உயர்த்தியதோடு விக்கெட் விழாமலும் பார்த்துக்கொண்டனர். ரஸா 95 பந்துகளில் [5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்] 100 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் பன்யங்கரா ரன் அவுட் ஆனார். இறுதியாக ஜிம்பாப்வே 9 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது.