வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 21 ஜனவரி 2015 (18:36 IST)

மீண்டும் அதிவேக சதமடித்து சாதனை நிகழ்த்த வேண்டும் - அஃப்ரிடி விருப்பம்

உலக கோப்பை போட்டியில் மீண்டும் அதிவேக சதம் அடித்து எடுத்து சாதனை நிகழ்த்த விரும்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சாகித் அஃப்ரிடி கூறியுள்ளார்.
 
14 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பைப் போட்டித் தொடர் பிப்ரவரி 14ம் தேதி தொடங்கி, மார்ச் 29-ம் தேதி முடிவடைகிறது. ஆஸ்திரேலியாவில் 26 போட்டிகளும், நியூசிலாந்தில் 23 போட்டிகளும் நடைபெறவுள்ளது.
 

 
இந்நிலையில் மீண்டும் அதிவேக சதமடிப்பது குறித்து பேசிய சாகித் அஃப்ரடி, “இது போன்ற சாதனைகளை திட்டமிட்டு நிகழ்த்துவோம். ஆனால் அது மிகவும் சிறப்பு உள்ள நாளின் போது தான் நிகழ்கிறது. உலக கோப்பை போட்டியின் போது டிவில்லியர்ஸ் ஏற்படுத்தியிருந்த சாதனையை மேம்படுத்த முயற்சி செய்யும் நாளே சிறந்த நாளாகும்.
 
இப்போது ஒருநாள் போட்டிகளில் அதிவேக அரைசதம் மற்றும் சதம் சாதனையை டி வில்லியர்ஸ் வைத்து இருப்பது பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. சாதனையை முறியடித்து அவருக்கு சிறப்பு மிக்க நாளாகும்.
 
வரும் உலக கோப்பை போட்டியில் மீண்டும் அந்த சாதனையை செய்ய முயற்சி செய்வேன். ஆனால் களம் இறங்கும் வரிசையில் தற்போது அரை சதம் மட்டுமே அடிக்க முடியும் சதம் என்பது கடினமானது. ஆனால் எனக்கு சிறப்பு மிக்க நாள் எது என்பது தெரிய வரும்” என்று கூறியுள்ளார்.
 
சாகித் அஃப்ரிடி 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 37 பந்துகளில் சதம் அடித்தார். அந்த சாதனையை நியூசிலாந்தின் ஆண்டர்சன் 36 பந்துகளில் சதத்தை கடந்து முறியடித்தார். தற்போது தென்னாப்பிரிக்க வீரர்  டிவில்லியர்ஸ் 31 பந்துகளில் சதம் அடித்ததே அதிவேக சதமாக இருக்கிறது.