வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 22 ஜனவரி 2015 (20:33 IST)

ஷிகர் தவான் கில்கிறிஸ்ட் பாணியை பின்பற்ற வேண்டும் - தோனி அறிவுரை

இந்திய அணியின் தொடக்க வீரர் முன்னாள் ஆஸ்திரேலியா அதிரடி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் பாணியை பின்பற்ற வேண்டும் என்று தோனி அறிவுரை வழங்கியுள்ளார்.
 

 
இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகார் தவான் சமீப காலங்களில் சரியாக சோபிக்கவில்லை. நடந்து கொண்டிருக்கும் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநால் போட்டிகளின் இரண்டு ஆட்டங்களில் முறையே 2, 1 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அவரது மோசமான ஃபார்ம் குறித்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறும்போது, ”தவான் எவ்வளவு பெரிய நெருக்கடியில் இருக்கிறார் என்பதை என்னால் சிந்திக்க முடியவில்லை. ஆசிய துணை கண்டங்களுக்கு வெளியே வீரர்கள் ரன்களை குவிக்க விரும்புகின்றனர்.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

இதற்காக அவர்கள் நிறைய முயற்சிகளை மேற்கொள்கின்றனர். கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் போது அவர்கள் சோர்வடைந்து விடிகின்றனர். தொடர்ந்து பேட்டிங்கில் தோல்வி அடையும்போது வீரர்கள் ஆடுகளத்தில் தங்களை வேறுவிதமாக வெளிப்படுத்த நல்ல நிலையை கண்டுபிடிக்க வேண்டும்.
 
இதனை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் மிகச்சிறப்பாக செய்து உள்ளார். அவர் பேட்டிங்கில் நல்ல நிலையில் இல்லாத போதும் முதல் பந்திலிருந்தே அதிரடியான முறையில் ஆடத் தொடங்குவார்.
 

 
இந்த யுக்தி எப்போதும் கைகொடுக்கும். இரண்டு நல்ல ஷாட்களை ஆடிய பிறகு உடனடியாக பார்ம் வந்துவிட போகிறது. இந்த முறையை தவான் பின்பற்றினால் உதவியாக அமையும் என்று நம்புகிறேன்” என்று அறிவுரை வழங்கியுள்ளார்.