வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 28 மே 2015 (11:18 IST)

குழந்தையின் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்ட ஷேன் வாட்சன்

சமீபத்தில் பிறந்த தனது 2 ஆவது குழந்தையின் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன்.
ஷேன் வாட்சன் - லீ தம்பதிகளுக்கு கடந்த சனிக்கிழமை அன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் இந்த குழந்தையின் பெயர் மாடில்டா விக்டோரியா ஆகும். இந்நிலையில் தனது அழகிய இரு குழந்தைகள் மற்றும் மனைவி ஆகியோருடன் வாட்சன் உள்ள ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். 
மேலும் மகிழ்ச்சியை வெளிபடுத்த வார்த்தைகளே இல்லை என ஷேன் வாட்சன் தனது கருத்துகளை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.