செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2015 (18:54 IST)

வீட்டு பணிப்பெண் சித்ரவதை: பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் சிறையில் அடைப்பு

வீட்டுப் பணிப்பெண்ணை சித்ரவதை செய்த புகாரில் பங்களாதேஷ் வீரர் சரணடைந்ததை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 

 
பங்களாதேஷின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான, ஷஹாதத் ஹொசைன் [29]. இவர் தனது வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தியிருந்த ஒரு சிறுமியை, சித்ரவதை செய்ததாக புகார் எழுந்தது.
 
இந்த 11 வயது சிறுமி உடலில் பல காயங்கள் மற்றும் கால் முறிந்ததை மருத்துவர்கள் உறுதி செய்த பின்னர், இவர்கள் இருவரும் ஒரு மாதத்துக்கு முன்னர் தலைமறைவாயினர்.
 
பின்னர், தன் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள ஷஹாதத் ஹொசைன் போலிசில் சரணடைந்துள்ளார். அவரது ஜாமின் மனுவை நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மனைவி ஞாயிறன்று கைது செய்யப்பட்டார்.
 
ஷஹாதத் ஹொசைன் பங்களா தேஷ் கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்தது. இந்த சம்பவங்கள் தொடர்பாக தர்மசங்கடப்படுவதாக வாரியம் கூறியுள்ளது.
 
இது குறித்து ஷஹாதத் ஹொசைனின் வழக்கறிஞர் கூறுகையில், “நாங்கள் அவர் எந்த குற்றமும் செய்யவில்லை என்று வாதடினோம். மேலும், அந்த சிறுனி தாக்கப்பட்டதாக கூறப்படும் அந்நாளில் அவர் அங்கு இல்லை” என்று கூறியுள்ளார்.
 
36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷஹாதத் ஹொசைன் 70 விக்கெட்டுகளையும், 79 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 47 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.