வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 7 ஜனவரி 2015 (17:02 IST)

உலகக் கோப்பை பாகிஸ்தான் அணியில் சயீத் அஜ்மல், சோயப் மாலிக் நீக்கம்

2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு மிஸ்பா உல் ஹக் தலைமையிலான அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வரும் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் மார்ச் 29ஆம் தேதி வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இந்த உலகக் கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணி இன்று தேர்வு செய்யப்பட்டது.
 

 
இந்த அணியில் சயீத் அஜ்மல், சோயப் மாலிக், கம்ரன் அக்மல், உமர் குல் ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை. அதே சமயம், பந்தை எறிவதாக குற்றம் சாட்டப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ள முகமது ஹபீஸ், யூனிஸ் கான் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளார்.
 
பாகிஸ்தான் அணி வீரர்கள் வருமாறு:
 
மிஸ்பா உல் ஹக் (கேப்டன்), அகமது ஷெஜாட், முகமது ஹபீஸ், சர்பராஸ் அகமது, யூனிஸ் கான், ஹாரிஸ் சொஹைல், உமர் அக்மல், ஷோயப் மக்சூத், அப்ரிடி, யாசிர் ஷா, முககமது இர்ஃபான், ஜுனைத் கான், ஈஷான் அடில், சொஹைல் கான், வஹாப் ரியாஸ்.