1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: செவ்வாய், 15 ஜூலை 2014 (18:09 IST)

தோனியை விலக்கிவிட்டு கோலியை கேப்டன் ஆக்குங்கள் - சேப்பல்

இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து தோனியை விலக்கிவிட்டு  அந்த பதவியை விராட் கோலிக்கு கொடுக்கலாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் சமீபத்தில் முடிந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. 
 
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல், 'இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து தோனியை விலக்கிவிட்டு அந்த பதவியை விராட் கோலிக்கு  கொடுக்கலாம்.
 
டி20, ஒருநாள் போட்டிகளுக்கு சிறந்த கேப்டனாக இருக்கும் தோனி டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை நிச்சயமாக டோனி சிறந்த கேப்டன் இல்லை. 
 
டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியை விராட் கோலிக்கு கொடுக்கலாம். கேப்டன் பதவி கோலிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாதது என நினைக்கிறேன், அவர் மிகவும் ஸ்ட்ராங்கான, நம்பிக்கையான கிரிக்கெட் வீரர். 
 
அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதில் இந்திய தேர்வுக் குழுவினர் கடுமையான முடிவு எடுக்க வேண்டும்'  என்று கூறியுள்ளார்.