செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 12 டிசம்பர் 2014 (14:09 IST)

ரஞ்சி டிராபி கிரிக்கெட்: மும்பை அணியை வீழ்த்திய காஷ்மீர் அணிக்கு சச்சின் பாராட்டு

ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுகொண்டிருக்கும் நிலையில், மும்பை அணியை வீழ்த்திய காஷ்மீர் அணிக்கு  சச்சின் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
 
கிரிக்கெட் போட்டிகளில் பிரபலமான ரஞ்சி டிராபி போட்டிகள் நடந்து வருகிறது. இப்போட்டியில் 40 முறை சாம்பியனான மும்பை அணியை காஷ்மீர் அணி மிக அபாரமாக வென்றுள்ளது.
 
இதற்காக பல்வேறு தரப்பிலி்ருந்தும் காஷ்மீர் அணிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் அந்த அணி வீரர்களை சந்தித்து தனது பாராட்டுகளை தெரிவித்தார். இந்த வெற்றி மிகவும் சிறப்பானது என்றார். வரும் ஆட்டங்களிளும் இது போன்று சிறப்பாக செயல்பட வேண்டும் என்று வீரர்களிடம் கூறினார்.